IPL 2026- கிறிஸ் கெயில் கூட செய்தது இல்ல.. ஐபிஎல் வரலாற்றில் ஃபின் ஆலன் மாபெரும் சாதனை.. ஒரே வீரர்
கொல்கத்தா: ஐபிஎல் 2026 இல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஃபின் ஆலன், 35 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். இதில் 10 சிக்ஸர்களையும் அவர் விளாசினார்.இதன் மூலம் ஆலன் புதிய வரலாறு படைத்துள்ளார். ஒரு ஐபிஎல் சீசனில் இரண்டு முறை 10 சிக்ஸர்களுக்கு மேல் அடித்த உலகின் முதல் பேட்டர் என்ற சாதனையை அவர் பெற்றார்.
கடந்த மே 8 அன்று டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் (10 சிக்ஸர்கள்) எடுத்திருந்த ஆலன், தற்போது குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராகவும் 10 சிக்ஸர்களைப் பதிவு செய்து இச்சாதனையை உறுதிப்படுத்தினார்.

ஐபிஎல் வரலாற்றில் பல வீரர்கள் ஒரு இன்னிங்ஸில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை அடித்திருந்தனர். ஆனாலும் ஒரு ஐபிஎல் சீசனில் இருமுறை இந்த சாதனையை நிகழ்த்தியவர் ஃபின் ஆலன் மட்டுமே. கிறிஸ் கெயில் தனது 2009 முதல் 2021 வரையிலான ஐபிஎல் பயணத்தில் நான்கு முறை 10 சிக்ஸர்களுக்கு மேல் அடித்திருந்தாலும், ஒரு சீசனில் இருமுறை அடித்ததில்லை.
கெயில், ஆலன் நீங்கலாக, வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் ஷர்மா ஆகியோரும் ஐபிஎல் இன்னிங்ஸ்களில் பலமுறை 10 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை அடித்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் 10 சிக்ஸர்களுக்கு மேல் அடித்த மூன்றாவது பேட்டர் ஃபின் ஆலன் ஆவார்.
இவருக்கு முன் வைபவ் சூர்யவன்ஷி (ஏப்ரல் 28, 2025 இல் 103 ரன்களுடன் 11 சிக்ஸர்கள்), வில் ஜாக்ஸ் (ஏப்ரல் 28, 2024 இல் 100* ரன்களுடன் 10 சிக்ஸர்கள்) சாதனை புரிந்தனர்.ஒரு ஐபிஎல் சீசனில் இருமுறை 10 சிக்ஸர்களுக்கு மேல் அடித்த முதல் KKR வீரரும் ஃபின் ஆலன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. KKR அணிக்காக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் (13) அடித்த சாதனை பிரெண்டன் மெக்கல்லம் வசம் உள்ளது.
2008 ஏப்ரல் 18 அன்று, ஐபிஎல் வரலாற்றில் முதல் போட்டியான பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக மெக்கல்லம் 158* ரன்கள் குவித்து இச்சாதனையை படைத்தார். ஃபின் ஆலன் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 7 ரன்களில் அந்த வாய்ப்டிப இழந்தார். அவர் ஆட்டமிழந்ததும் ஒட்டுமொத்த ரசிகர்களும், சக அணி வீரர்களும் எழுந்து நின்று கை தட்டினர்.


Click it and Unblock the Notifications