Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2026: சிவம் துபே, ஜடேஜா, பாண்டியா.. MVP விருதை வெல்லப் போவது இந்த 5 பேரில் ஒருவர்தான்!

மும்பை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், இந்த ஆண்டின் மதிப்புமிக்க வீரர் எனப்படும் எம்விபி (MVP) விருதை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. கொல்கத்தா அணியின் ஜாம்பவான் ஆந்த்ரே ரஸல் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், இந்த ஆண்டு எம்விபி விருதை வெல்ல அதிக வாய்ப்புள்ள 5 சிறந்த ஆல்ரவுண்டர்கள் குறித்து இங்கு விரிவாகக் காண்போம்.

சுனில் நரைன்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுனில் நரைன் 2012, 2018 மற்றும் 2024 என 3 முறை இந்த விருதை வென்று சாதனை படைத்துள்ளார். தொடக்க வீரராக களமிறங்கி அதிரடி காட்டுவதுடன், 4 ஓவர்கள் சிக்கனமாக சுழற்பந்து வீசி எதிரணியை திணறடிக்கும் இவர் 4 வது முறையாக இந்த விருதை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.

IPL 2026 Five Best All-rounders Contending for the MVP Award in the Upcoming IPL 2026 Season

ஹர்திக் பாண்டியா: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா ஒரு முழுமையான ஆல்ரவுண்டராக திகழ்கிறார். மிடில் ஆர்டரில் அதிரடி ஃபினிஷராகவும், வேகப்பந்து வீச்சாளராகவும், சிறந்த ஃபீல்டராகவும் செயல்பட்டு ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர்.

அக்சர் படேல்: டெல்லி கேபிடல்ஸ் அணியின் முதுகெலும்பாக உள்ள அக்சர் படேல் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பந்துவீச்சில் ரன்களைக் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்துவது மட்டுமின்றி, லோயர் ஆர்டரில் சிறந்த பவர் ஹிட்டராகவும் உருவெடுத்துள்ளதால் இவருக்கும் அதிக வாய்ப்புள்ளது.

ரவீந்திர ஜடேஜா: சிஎஸ்கே அணியில் இருந்து தனது முதல் ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்பியுள்ள ஜடேஜா இந்த பந்தயத்தில் முக்கிய இடத்தில் உள்ளார். 140 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிரடி பேட்டிங், மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவது மற்றும் உலகத்தரம் வாய்ந்த ஃபீல்டிங் என பல வகைகளில் ஆதிக்கம் செலுத்தும் திறன் கொண்டவர்.

சிவம் துபே: 12 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்பட்ட சிவம் துபே, சுழற்பந்து வீச்சாளர்களை விளாசுவதில் வல்லவர். அதிரடி பவர் ஹிட்டரான இவர், தேவைப்படும் நேரங்களில் தனது மிதவேகப் பந்துவீச்சு மூலம் விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணிக்கு மிகப்பெரிய பலமாக விளங்குகிறார்.

Story first published: Tuesday, March 17, 2026, 12:45 [IST]
Other articles published on Mar 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+