For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 2026 முழு அட்டவணை.. 13 மைதானங்களில் 70 லீக் போட்டிகள்.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐபிஎல் 2026 தொடரின் எஞ்சிய லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணையை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 4 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் தேதிகள் குறித்த விவரங்களுக்காக காத்திருந்த பிசிசிஐ, தற்போது அனைத்து லீக் போட்டிகளுக்கான தேதிகள் மற்றும் மைதானங்களை உறுதி செய்துள்ளது.

முன்னதாக முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்தமாக 70 லீக் போட்டிகளுக்கான முழு விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த சீசனில் மொத்தம் 13 மைதானங்களில் லீக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற உள்ளன.

IPL 2026 Full Schedule 70 League matches in 13 venues BCCI announced full IPL match date and time

வரும் மார்ச் 28 ஆம் தேதி பெங்களூருவில் தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. 2வது கட்ட லீக் போட்டிகள் ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்குகின்றன. விறுவிறுப்பான லீக் சுற்றின் கடைசிப் போட்டி மே 24 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டி நேரங்கள் மற்றும் புதிய மைதானங்கள்:

இந்த சீசனில் மொத்தம் 12 நாட்களில் தலா 2 போட்டிகள் நடைபெற உள்ளன. ஒரு நாளில் 2 போட்டிகள் நடைபெறும் போது பகல் ஆட்டம் பிற்பகல் 3:30 மணிக்கும், இரவு ஆட்டம் 7:30 மணிக்கும் தொடங்கும். ஒரு போட்டி மட்டுமே நடைபெறும் நாட்களில் வழக்கம் போல இரவு 7:30 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

வழக்கமான மைதானங்களை தவிர்த்து கவுகாத்தி, ராய்ப்பூர் மற்றும் தர்மசாலா ஆகிய 3 மைதானங்களிலும் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது 7 உள்ளூர் போட்டிகளில் 3 போட்டிகளை கவுகாத்தியில் விளையாடுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணி தனது உள்ளூர் போட்டிகளில் 3 போட்டிகளை தர்மசாலாவிலும், மீதமுள்ள 4 போட்டிகளை முல்லான்பூரிலும் விளையாட உள்ளது.

நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி முதல்முறையாக தனது அனைத்து உள்ளூர் போட்டிகளையும் சின்னசாமி மைதானத்தில் விளையாடவில்லை. மே 10 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவும், மே 13 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராகவும் ராய்ப்பூர் மைதானத்தில் ஆர்சிபி அணி தனது உள்ளூர் போட்டிகளை விளையாட உள்ளது. பிளே ஆப் சுற்று மற்றும் மாபெரும் இறுதிப்போட்டி நடைபெறும் தேதிகள் மற்றும் மைதானங்கள் குறித்த விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. முழு அட்டவணை வெளியாகி உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

ஐபிஎல் 2026 லீக் போட்டிகளின் முழு அட்டவணை:

மார்ச் 28 - 7:30 PM - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பெங்களூரு
மார்ச் 29 - 7:30 PM - மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை
மார்ச் 30 - 7:30 PM - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - கவுகாத்தி
மார்ச் 31 - 7:30 PM - பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - புதிய சண்டிகர்
ஏப்ரல் 01 - 7:30 PM - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் - லக்னோ
ஏப்ரல் 02 - 7:30 PM - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - கொல்கத்தா
ஏப்ரல் 03 - 7:30 PM - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - சென்னை
ஏப்ரல் 04 - 3:30 PM - டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - டெல்லி
ஏப்ரல் 04 - 7:30 PM - குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - அகமதாபாத்
ஏப்ரல் 05 - 3:30 PM - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஹைதராபாத்
ஏப்ரல் 05 - 7:30 PM - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு
ஏப்ரல் 06 - 7:30 PM - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா
ஏப்ரல் 07 - 7:30 PM - ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - கவுகாத்தி
ஏப்ரல் 08 - 7:30 PM - டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி
ஏப்ரல் 09 - 7:30 PM - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா
ஏப்ரல் 10 - 7:30 PM - ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கவுகாத்தி
ஏப்ரல் 11 - 3:30 PM - பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - புதிய சண்டிகர்
ஏப்ரல் 11 - 7:30 PM - சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் - சென்னை
ஏப்ரல் 12 - 3:30 PM - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ
ஏப்ரல் 12 - 7:30 PM - மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை
ஏப்ரல் 13 - 7:30 PM - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - ஹைதராபாத்
ஏப்ரல் 14 - 7:30 PM - சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை
ஏப்ரல் 15 - 7:30 PM - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பெங்களூரு
ஏப்ரல் 16 - 7:30 PM - மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - மும்பை
ஏப்ரல் 17 - 7:30 PM - குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அகமதாபாத்
ஏப்ரல் 18 - 3:30 PM - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ் - பெங்களூரு
ஏப்ரல் 18 - 7:30 PM - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - ஹைதராபாத்
ஏப்ரல் 19 - 3:30 PM - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா
ஏப்ரல் 19 - 7:30 PM - பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - புதிய சண்டிகர்
ஏப்ரல் 20 - 7:30 PM - குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - அகமதாபாத்
ஏப்ரல் 21 - 7:30 PM - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேபிடல்ஸ் - ஹைதராபாத்
ஏப்ரல் 22 - 7:30 PM - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ
ஏப்ரல் 23 - 7:30 PM - மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை
ஏப்ரல் 24 - 7:30 PM - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் - பெங்களூரு
ஏப்ரல் 25 - 3:30 PM - டெல்லி கேபிடல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி
ஏப்ரல் 25 - 7:30 PM - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ஜெய்ப்பூர்
ஏப்ரல் 26 - 3:30 PM - குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அகமதாபாத்
ஏப்ரல் 26 - 7:30 PM - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ
ஏப்ரல் 27 - 7:30 PM - டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி
ஏப்ரல் 28 - 7:30 PM - பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - புதிய சண்டிகர்
ஏப்ரல் 29 - 7:30 PM - மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை
ஏப்ரல் 30 - 7:30 PM - குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அகமதாபாத்
மே 01 - 7:30 PM - ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் - ஜெய்ப்பூர்
மே 02 - 7:30 PM - சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - சென்னை
மே 03 - 3:30 PM - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஹைதராபாத்
மே 03 - 7:30 PM - குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - அகமதாபாத்
மே 04 - 7:30 PM - மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை
மே 05 - 7:30 PM - டெல்லி கேபிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி
மே 06 - 7:30 PM - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - ஹைதராபாத்
மே 07 - 7:30 PM - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ
மே 08 - 7:30 PM - டெல்லி கேபிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி
மே 09 - 7:30 PM - ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - ஜெய்ப்பூர்
மே 10 - 3:30 PM - சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை
மே 10 - 7:30 PM - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் - ராய்ப்பூர்
மே 11 - 7:30 PM - பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் - தர்மசாலா
மே 12 - 7:30 PM - குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - அகமதாபாத்
மே 13 - 7:30 PM - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராய்ப்பூர்
மே 14 - 7:30 PM - பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - தர்மசாலா
மே 15 - 7:30 PM - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ
மே 16 - 7:30 PM - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா
மே 17 - 3:30 PM - பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - தர்மசாலா
மே 17 - 7:30 PM - டெல்லி கேபிடல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி
மே 18 - 7:30 PM - சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை
மே 19 - 7:30 PM - ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஜெய்ப்பூர்
மே 20 - 7:30 PM - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா
மே 21 - 7:30 PM - சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - சென்னை
மே 22 - 7:30 PM - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஹைதராபாத்
மே 23 - 7:30 PM - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ
மே 24 - 3:30 PM - மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை
மே 24 - 7:30 PM - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் - கொல்கத்தா

Story first published: Thursday, March 26, 2026, 19:00 [IST]
Other articles published on Mar 26, 2026
English summary
IPL 2026 Full Schedule announced by BCCI. The IPL Schedule has 70 League matches in 13 venues, BCCI announced full IPL match date and time. Play-off is not included in this schedule.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+