Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2026 சீசனிலிருந்து ஆஸ்திரேலிய அதிரடி நாயகன் மேக்ஸ்வெல் விலகல்.. முடிவுக்கு காரணம் என்ன?

மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் மேக்ஸ்வெல் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள மினி ஏலத்தில் மேக்ஸ்வெல் தனது பெயரை முன் பதிவு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

37 வயதான மேக்ஸ்வெல் கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டார். 7 போட்டிகளில் விளையாடிய மேக்ஸ்வெல் மொத்தமாகவே 48 ரன்கள் தான் அடித்து இருந்தார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 30 ரன்கள் ஆகும். மேக்ஸ்வெலின் சராசரி வெறும் 8 என்று அளவிலும், ஸ்டிரைக் ரேட் 97 என்ற அளவிலும் மோசமாக இருந்தது.

Glenn Maxwell

இதேபோன்று பந்துவீச்சில் மேக்ஸ்வெல் கடந்த சீசனில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதனால் மேக்ஸ்வெல் மினி ஏலத்திற்கு முன்பு பஞ்சாப் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த சூழலில் மேக்ஸ்வெலை சிஎஸ்கே அணி குறி வைத்து ஏலத்தில் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மேக்ஸ்வெல் அடுத்த சீசனுக்கான ஏலத்தில் தனது பெயரை கொடுக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் உள்ள வயதான வீரர்கள் பலரும் வரும் சீசனில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்காமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் பிஎஸ்எல் டி20 தொடரில் பங்கேற்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே டுபிளசிஸ் தனது முடிவை அறிவித்த நிலையில் தற்போது மேக்ஸ்வெல்லும் அதே பாதையை தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபோன்று கொல்கத்தா அணியின் ஆல் ரவுண்டரான ரஸிலும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

எனினும் அவர் அடுத்த சீசனில் பயிற்சியாளர் குழுவில் இடம் பெறுவேன் என்று தெரிவித்திருந்தார். ஐபிஎல் அணிகள் இளம் வீரர்களை நோக்கி செல்வதால் வயதான வீரர்கள் எல்லாம் பாகிஸ்தானை நோக்கி செல்ல முடிவெடுத்துள்ளனர். இதுவரை 141 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் மொத்தமாக 2819 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 18 அரை சதம் அடங்கும். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 155 என்று அளவில் இருக்கிறது. இதே போன்று பந்துவீச்சில் மேக்ஸ்வெல் 41 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

Story first published: Tuesday, December 2, 2025, 10:29 [IST]
Other articles published on Dec 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+