Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ஆல்-அவுட் ஆன ஆர்சிபி.. நம்ப முடியாத பவுலிங்கை போட்டு காலி செய்த குஜராத் டைட்டன்ஸ்

அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் ஆர்சிபி அணி பேட்டிங்கில் பெரும் தடுமாற்றத்தை சந்தித்தது. விராட் கோலி அதிரடியாகத் தொடங்கி ஆட்டத்தின் போக்கை மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் துல்லியமான பந்துவீச்சு ஆர்சிபி அணியின் ரன் வேகத்தை அடியோடு முடக்கியது. 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த ஆர்சிபி அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆர்சிபி அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கிய விராட் கோலி, ககிசோ ரபாடா வீசிய ஓவரில் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை விளாசி அரங்கத்தையே அதிரவைத்தார். 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த கோலி, ரபாடாவின் அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

IPL 2026 GT vs RCB Royal Challengers Bengaluru lose all wickets for 155 runs against Gujarat Titans

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜேக்கப் பெத்தேல் 5 ரன்களில் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 35 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி அணிக்கு தேவ்தத் படிக்கல் மற்றும் ரஜத் படிதார் ஜோடி ஓரளவுக்கு நம்பிக்கையளித்தது. ஆர்சிபி அணியின் மிடில் ஆர்டரை குஜராத் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் மொத்தமாக காலி செய்தார்.

4 ஓவர்கள் வீசிய ரஷீத் கான், வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்தார். அவரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆர்சிபி பேட்டர்கள் திணறினர். அதிரடி வீரர் டிம் டேவிட் 9 ரன்களிலும், நிலைத்து நின்று ஆடிய படிக்கல் 40 ரன்களிலும் ரஷித் கான் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். ரஷித் கானின் எகானமி ரேட் 4.80 ஆக இருந்தது குஜராத் அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

மற்றொருபுறம் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட் மற்றும் அர்ஷத் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். ரஜத் படிதார் 19 ரன்களிலும், ஜித்தேஷ் சர்மா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். குருணால் பாண்டியா 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். 126 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தவித்த ஆர்சிபி அணியை, வெங்கடேஷ் ஐயர் மற்றும் புவனேஷ்வர் குமார் ஜோடி மீட்கப் போராடியது. வெங்கடேஷ் 12, புவனேஷ்வர் 15 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

ஆர்சிபி அணி 19.2 ஓவரில் ஆல்-அவுட் ஆகி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் அணியைப் பொறுத்தவரை அனைத்து பந்துவீச்சாளர்களும் திட்டமிட்டுச் செயல்பட்டனர். ஹோல்டர் 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், அர்ஷத் கான் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முகமது சிராஜ் தனது பங்கிற்கு ஒரு விக்கெட்டை எடுத்தார்.

Story first published: Thursday, April 30, 2026, 21:37 [IST]
Other articles published on Apr 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+