Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சஞ்சு சாம்சன் சிஎஸ்கே-வுக்கு போனா என்ன.. நான் இருக்கேன்உங்களுக்கு.. குஜராத்தை துவம்சம் செய்த ஜுரல்

அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 210 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் துருவ் ஜுரலின் அதிரடி ஆட்டம் குஜராத் பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தது. சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சிஎஸ்கே அணிக்கு சென்ற நிலையில் அவரது இடத்தை நிரப்பி இருக்கிறார் துருவ் ஜுரல்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி களம் இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 6.2 ஓவர்களில் 70 ரன்கள் சேர்த்து சிறப்பான அடித்தளம் அமைத்தது. அதிரடியாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ரஷீத் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

IPL 2026 GT vs RR Dhruv Jurel s Explosive 75 Propels Rajasthan Royals to 210 6 Against Gujarat Titans in IPL 2026

இதன்பின்னர் வந்த துருவ் ஜுரல், ஜெய்ஸ்வாலுடன் இணைந்து அதிரடியில் மிரட்டினார். சஞ்சு சாம்சன் இல்லாத குறையைத் தனது பேட்டாலேயே நிவர்த்தி செய்த ஜுரல், மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர் மழையைப் பொழிந்தார். சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 36 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், துருவ் ஜுரல் மிகுந்த முதிர்ச்சியுடன் நிலைத்து நின்று ஆடினார்.

அவர் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 மெகா சிக்சர்களுடன் 75 ரன்கள் குவித்து அசத்தினார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 178.57 ஆக இருந்தது. கேப்டன் ரியான் பராக் 8 ரன்களிலும், அதிரடி மன்னன் ஷிம்ரான் ஹெட்மயர் 8 பந்துகளில் 18 ரன்களும் எடுத்து வெளியேறினர். இறுதியில் ரவீந்திர ஜடேஜா 7 ரன்களும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் சேர்த்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை ககிசோ ரபாடா 4 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ், அசோக் சர்மா, பிரசித் கிருஷ்ணா மற்றும் கேப்டன் ரஷீத் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் குஜராத் அணி தற்போது விளையாடியாது.

Story first published: Saturday, April 4, 2026, 21:40 [IST]
Other articles published on Apr 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+