Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சுப்மன் கில் நீக்கம்.. குஜராத் டைட்டன்ஸ் கேப்டனான ரஷீத் கான்.. GT vs RR போட்டியில் மாற்றம்

அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மூத்த வீரர் ரஷீத் கான் கேப்டனாக பொறுப்பேற்றார். இதற்கிடையே டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

டாஸ் வென்ற பிறகு பேசிய ரியான் பராக், "நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் சிறப்பாக விளையாடும் அணியாக நாங்கள் மாற வேண்டும். இந்த ஆடுகளத்தில் 210 ரன்கள் வரை குவித்து அதனைத் தற்காத்துக் கொள்வோம் என நம்புகிறோம். இன்றைய போட்டியில் துஷார் மற்றும் துபே ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

IPL 2026 GT vs RR Riyan Parag Opts to Bat First as Shubman Gill Misses Out Due to Injury

குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரை பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் வழக்கமான கேப்டன் சுப்மன் கில் தசைப்பிடிப்பு காரணமாக விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ரஷீத் கான் அணியை வழிநடத்துகிறார். ரஷீத் கான் பேசுகையில், "நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம். சுப்மன் கில் விரைவில் குணமடைந்து அணிக்குத் திரும்புவார் என நம்புகிறோம். இன்றைய போட்டியில் குமார் குஷாக்ரா அறிமுக வீரராகக் களமிறங்குகிறார். கடந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம், அதே உத்வேகத்தை இன்றும் தொடருவோம்" என்றார்.

ஆடுகளம் குறித்து முன்னாள் வீரர்கள் கூறுகையில், மைதானம் மிகவும் பசுமையாகவும், பந்து வேகமாகச் செல்லும் வகையிலும் உள்ளது. நேராக அடிக்கப்படும் பவுண்டரிகள் நீளமாகவும், பக்கவாட்டில் 64 மீட்டர் மற்றும் 67 மீட்டர் என்ற அளவிலும் உள்ளன. ஆடுகளத்தில் லேசான புற்கள் இருப்பதால் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பந்து ஸ்விங் ஆக வாய்ப்புள்ளது.

இங்கு சராசரி ஸ்கோர் 216 ரன்களாக உள்ளது. பொதுவாக இங்கு டாஸ் வெல்லும் கேப்டன்கள் பந்துவீச்சைத் தான் தேர்வு செய்வார்கள். ஆனால் புள்ளிவிவரங்களின்படி, முதலில் பேட்டிங் செய்யும் அணிகளே இங்கு அதிக முறை வெற்றி பெற்றுள்ளன. வேகப்பந்து வீச்சாளர்களின் எகானமி 10.2 ஆகவும், சுழற்பந்து வீச்சாளர்களின் எகானமி 9.5 ஆகவும் உள்ளது. எனவே இந்தப் போட்டியில் மிகப்பெரிய ரன் குவிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். சுப்மன் கில் இல்லாதது குஜராத் அணிக்கு பேட்டிங்கில் ஒரு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, April 4, 2026, 19:16 [IST]
Other articles published on Apr 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+