Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சாய் சுதர்சன் செய்த மெகா சொதப்பல்.. தப்பித்த வைபவ் சூர்யவன்ஷி.. குஜராத் அணிக்கு நெருக்கடி

சண்டிகர்: 2026 ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் ஒருமுறை தனது அதிரடியைக் காட்டியுள்ளார். அவருக்கு குஜராத் வீரர் சாய் சுதர்சன் கொடுத்த 'லைஃப்' ஆட்டத்தின் போக்கையே மாற்றியுள்ளது.

சண்டிகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் 15 வயது நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 97 ரன்கள் குவித்ததைத் தொடர்ந்து, இந்தப் போட்டியிலும் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். பிளே-ஆப் சுற்றின் இரண்டு போட்டிகளிலும் தொடர்ந்து அரைசதம் அடித்து அவர் சாதனை படைத்துள்ளார்.

IPL 2026 GT vs RR Vaibhav Suryavanshi escaped at 46 as Sai Sudharsan Dropped a Catch in Qualifier 2

சாய் சுதர்சன் செய்த தவறு

இந்த இன்னிங்ஸில் வைபவ் சூர்யவன்ஷி 46 ரன்கள் எடுத்திருந்தபோது, குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்சன் அவரது கேட்ச்சை நழுவவிட்டார். மிகவும் எளிதான அந்த வாய்ப்பை சாய் சுதர்சன் தவறவிட்டது குஜராத் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட வைபவ், அடுத்த சில பந்துகளிலேயே தனது அரைசதத்தை நிறைவு செய்தார்.

ஆரம்பமே விக்கெட்

முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ககிசோ ரபாடா, துருவ் ஜூரலை 7 ரன்களில் வெளியேற்றினார். இதனால் 2 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ஜடேஜாவின் காயம்

சூர்யவன்ஷியுடன் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா அணியை மீட்கப் போராடினார். அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜடேஜாவுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் காயம் காரணமாக (ரிட்டையர்ட் ஹர்ட்) தற்காலிகமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ரியான் பராக் 11 ரன்களிலும், தசுன் ஷனகா 3 ரன்களிலும் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். ஜோப்ரா ஆர்ச்சரும் 7 ரன்களில் பிரசித் கிருஷ்ணாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

IPL 2026: டாஸ் சர்ச்சை.. குஜராத் வென்ற டாஸ் ராஜஸ்தானுக்கு மாறியது..ரெப்ரீ செயலால் கொந்தளிப்பு

IPL 2026: டாஸ் சர்ச்சை.. குஜராத் வென்ற டாஸ் ராஜஸ்தானுக்கு மாறியது..ரெப்ரீ செயலால் கொந்தளிப்பு

5 விக்கெட் விழுந்ததை அடுத்து சிகிச்சை முடிந்து மீண்டும் களமிறங்கிய ஜடேஜா, சூர்யவன்ஷிக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார். சாய் சுதர்சன் விட்ட அந்த ஒரு கேட்ச் காரணமாக, ராஜஸ்தான் அணி சரிவில் இருந்து மீண்டு கௌரவமான ஸ்கோரை நோக்கி முன்னேறியது. முக்கியமான போட்டியில் சாய் சுதர்சன் செய்த இந்தத் தவறு, குஜராத் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

Story first published: Friday, May 29, 2026, 21:28 [IST]
Other articles published on May 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+