Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் மகத்தான சாதனை.. சச்சின், ரோகித் லிஸ்டில் பாண்டியா

அகமதாபாத்: ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2026 லீக் போட்டியில், 32 வயதான பாண்டியா ஒரு மகத்தான மைல்கல்லை எட்டினார். அசோக் ஷர்மா வீசிய 14வது ஓவரின் ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்து மும்பை அணிக்காக 2000 ரடனகளை அடித்த 7வது வீரர் என்ற சாதனையை பூர்த்தி செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் 2000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பெற்றார். அவர் 2012ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது இந்தச் சாதனையை எட்டினார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த சாதனையை ரோஹித் சர்மா தன்வசம் வைத்துள்ளார். 38 வயதான அவர், இதுவரை 231 ஐபிஎல் போட்டிகளில் 6013 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக அவர் ரூ.16.30 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார்.

ரோஹித், பாண்டியா மற்றும் சச்சின் டெண்டுல்கர் தவிர, சூர்யகுமார் யாதவ், கீரன் பொல்லார்ட், அம்பதி ராயுடு, இஷான் கிஷன் ஆகியோரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான தற்போதைய போட்டி ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸுக்காக விளையாடும் 126வது ஐபிஎல் ஆட்டமாகும். இதற்கு முன் அவர் விளையாடிய 125 போட்டிகளில் நான்கு அரை சதங்களை அடித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் தவிர்த்து, ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளார். 2022, 2023 என இரண்டு சீசன்கள் குஜராத் டைட்டன்ஸுடன் அவர் இணைந்திருந்தார். இந்த காலகட்டத்தில், அணியை தொடர்ச்சியாக இருமுறை இறுதிப் போட்டிக்கு வழிநடத்தினார். மேலும், 2022 ஐபிஎல் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை வென்றபோது, ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக மொத்தம் 31 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ஹர்திக் பாண்டியா, 833 ரன்களையும், 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில், ஒரு அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி தன்வசம் வைத்துள்ளார். 2008 இல் அறிமுகமானதிலிருந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 273 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, அவர் இதுவரை 8908 ரன்களை குவித்துள்ளார்.

Story first published: Monday, April 20, 2026, 22:16 [IST]
Other articles published on Apr 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+