ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான்.. நஷ்ட ஈடாக KKR எவ்வளவு தரனும்?
கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடவிருந்த வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாஃபிஸுர் ரஹ்மான், பிசிசிஐயின் அறிவுறுத்தலின் பேரில் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, அவருக்கு எவ்வளவு நஷ்ட ஈடை கொல்கத்தா அணி வழங்க வேண்டும் என்று தற்போது பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளின் கடும் போட்டிக்கு இடையே, ஐபிஎல் ஏலத்தில் ரூ. 9.20 கோடிக்கு KKR அணியால் வாங்கப்பட்ட முஸ்தாஃபிஸுர், சமீபத்தில் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளைத் தொடர்ந்து அணியில் இருந்து வெளியேற நேர்ந்தது. இது பிசிசிஐ தலையிடக் காரணமானது. இதற்குப் பதிலடியாக, வங்கதேச கிரிக்கெட் வாரியம் தங்களது டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்றக் கோரியது.

முஸ்தாஃபிஸுர் தாமாக விலகவோ அல்லது எந்த தவறும் செய்யவோ இல்லை என்ற நிலையில், எவ்வளவு பணத்தை கேகேஆர் அணி வழங்க வேண்டும் என்று விவாதம் எழுந்துள்ளது. அனைத்து ஐபிஎல் வீரர்களின் சம்பளமும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்களுக்கு, பயிற்சி முகாமில் இணைந்த பிறகு அல்லது போட்டித் தொடரின் போது காயம் ஏற்பட்டால் பொதுவாக அணி நிர்வாகம் செலுத்தும்.
பொதுவாக 50% வரை காப்பீட்டில் இருந்து செலுத்தப்படும். இந்தியாவைச் சேர்ந்த, பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தத்தில் உள்ள காயமடைந்த வீரர்களுக்கு பிசிசிஐயே செலுத்தும். ஆனால், முஸ்தாஃபிஸுர் ரஹ்மான் பொறுத்தவரை. காயத்தால் விலகவில்லை என்பதால், எந்தத் தொகையும் KKR அணி வழங்கதேவையில்லை. காப்பீட்டிலும் இது அடங்காது என்பதால், , தற்போதைய சூழ்நிலையில், ஒரு பைசா கூட அவருக்குச் செலுத்த தேவையில்லை.
இதனால், சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்வதைத் தவிர முஸ்தாஃபிஸுருக்கு வேறு வழியில்லை. அதுவும் ஐபிஎல் இந்தியச் சட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது. இதனால் வெளிநாட்டு வீரர், இந்தியாவில் வழக்கு தொடரவும் விரும்ப மாட்டார்கள். வேண்டும் என்றால் சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தை நாட வேண்டும்.


Click it and Unblock the Notifications