IPL 2026: இசான் கிஷன் ஹாட்ரிக் சிக்சர்.. 28 பந்தில் அரைசதம் அடித்து விளாசல்
ஐதராபாத்: ஐபிஎல் 2026 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும் மோதின. ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில் SRH வீரர் இஷான் கிஷன், பந்துவீச்சாளர் விஜய் குமார் வைஷாக் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி வெறும் 28 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ஐபிஎல் 2026 சீசனின் டாப்-5 ரன் குவிப்பாளர்களில் ஒருவரான கிஷன், 11 இன்னிங்ஸ்களில் 409 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 4 அரைசதங்களுடன், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு எதிராக 44 பந்துகளில் 91 ரன்கள் அடித்தார். 2026 ஏலத்திற்கு முன் ஹைதராபாத் அணி அவரை ₹11.25 கோடிக்கு தக்கவைத்தது.

இப்போட்டியில் சன்ரைசர்ஸ் டாப் ஆர்டர் சிறப்பாக செயல்பட்டது. தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 35 ரன்களும், டிராவிஸ் ஹெட் 19 பந்துகளில் 38 ரன்களும் குவித்து, உறுதியான தொடக்கத்தை அளித்தனர். இஷான் கிஷன் 32 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து பங்களித்தார். பஞ்சாப் தரப்பில் யுஸ்வேந்திர சஹல் தனது 4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் 2026 தொடரில் இவ்விரு அணிகளும் சந்திக்கும் இரண்டாவது போட்டி இது. முந்தைய போட்டியில் பஞ்சாப், 220 ரன்கள் இலக்கை 7 பந்துகள் மீதம் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதற்குப் பழி தீர்க்கவும், புள்ளிப்பட்டியலில் பஞ்சாபை பின்னுக்குத் தள்ளவும் சன்ரைசர்ஸ் களமிறங்கியது.
பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்னு 202 ரன்கள் எடுத்து ஹாட்ரிக் தோல்வியை தழுவியது, இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறது. இசான் கிஷன் தொடர்ந்து அதிரடி காட்டி வருவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications