Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சிஎஸ்கே லோகோவை முத்தமிட்ட ஜடேஜா! பாசத்தை வெளிப்படுத்தினார்! தோனியிடம் பேசவில்லை என கருத்து

கவுஹாத்தி: இந்திய நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, நடப்பு ஜபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளார். சமீபத்தில் தனது முன்னாள் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதிய அனுபவம் தனக்கு உணர்ச்சிபூர்வமாகவும் வித்தியாசமாகவும் இருந்ததாக அவர் கூறினார்.

முன்னதாக 2008-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அல்லது 2016-17-ல் குஜராத் லயன்ஸ் அணிகளுடன் இருந்த காலங்களில் கூட இப்படி ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டதில்லை என்று ஜடேஜா குறிப்பிட்டார். ஜடேஜா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் 2012 முதல் 2025 வரை (அணி தடை செய்யப்பட்ட இரண்டு சீசன்கள் தவிர) 13 ஆண்டுகள் நீடித்த பயணத்தை மேற்கொண்டார்.

இந்த காலகட்டத்தில், 2018, 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சிஎஸ்கே வென்ற மூன்று ஐபிஎல் கோப்பைகளில் அவர் முக்கியப் பங்காற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஜடேஜா பேட் செய்யவில்லை என்றாலும், பந்துவீச்சில் 2 விக்கெட் வீழ்த்தி (2/18) ஜொலித்தார். இதில் முன்னாள் சக வீரர் ஷிவம் துபே மற்றும் சர்பராஸ் கான் ஆகியோரை அவர் ஆட்டமிழக்கச் செய்தார்.

இந்த மாற்றம் குறித்து பேசிய ஜடேஜா, தோனி போனை அணைத்து வைத்திருப்பதாகக் கூறினார். அத்துடன், இந்த மாற்றத்தால் தோனி அல்லது சுரேஷ் ரெய்னா போன்ற எந்த சிஎஸ்கே ஜாம்பவானுடனும் தான் பேசவில்லை என்றும் ஜடேஜா தெரிவித்தார்.

போட்டி முடிந்த பிறகு அவர் அளித்த பேட்டியில், "நான் மாஹி பாயுடன் பேசவில்லை. அவர் தனது போனை எப்போதும் அணைத்து வைப்பார். ஆனால், நான் அவரைச் சந்திக்கும்போது, ரெய்னா பாய் மற்றும் அனில் கும்ப்ளே பாயையும் சந்திக்கும்போது, உங்கள் அனைவருடனும் நான் பேசுவேன்," என்று மனம் திறந்து பேசினார்.

ராஜஸ்தானுக்குச் சென்றது உணர்ச்சிபூர்வமானது என்று குறிப்பிட்ட ஜடேஜா, இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு இருப்பதாக கூறினார். 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பைக்குப் பிறகு தான் முதன்முதலில் இணைந்த அணிக்கு மீண்டும் திரும்புவது ஒரு நல்ல விஷயமாகப் பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.இதனிடையே, போட்டி முடிந்த பிறகு கலீல் அகமதை பார்த்த ஜடேஜா, அவர் அணிந்திருந்த ஜெர்சியில் உள்ள சிஎஸ்கே லோகோக்கு முத்திட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Story first published: Tuesday, March 31, 2026, 16:14 [IST]
Other articles published on Mar 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+