Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: முதல் பந்தில் சிக்ஸ்.. 3வது பந்தில் அவுட்.. ஜெய்ஸ்வால் - ஸ்டார்க் இடையே முதல் ஓவரில் மோதல்

ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் டெல்லி அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இடையே முதல் ஓவரிலேயே நடந்த அனல் பறக்கும் மோதல் ரசிகர்களை உச்சக்கட்ட பரபரப்பில் ஆழ்த்தியது. மிட்செல் ஸ்டார்க்கிற்கு இது நடப்பு சீசனில் முதல் போட்டி என்பதால் அவர் எப்படி பந்துவீசுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்த நிலையில், முதல் ஓவரிலேயே தரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஜெய்ப்பூர் ஆடுகளம் சற்று வேகம் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டாலும், பவர் பிளே ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் ஸ்ட்ரைக்கில் நிற்க, டெல்லி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் ஓவரை வீச ஓடி வந்தார்.

IPL 2026 Jaiswal Hits Six on First Ball but Gets Dismissed on Third Ball of Mitchell Starc in IPL 2026

ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தே சற்று ஷார்ட்டாக வர, அதை சற்றும் சளைக்காமல் எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் ஸ்கொயர் லெக் திசையில் பிரம்மாண்டமான சிக்ஸருக்கு பறக்கவிட்டார். நடப்பு சீசனில் தான் வீசிய முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி ஜெய்ஸ்வால் கொடுத்த இந்த மிரட்டலான வரவேற்பால் ஸ்டார்க் சற்று அதிர்ச்சியடைந்தார். பின்னர் 2வது பந்தை ஸ்டார்க் நேர்த்தியாக வீச, அதில் ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 3வது பந்தை ஸ்டார்க் வீசினார். அது மிடில் ஸ்டம்பை நோக்கி ஒரு லோ ஃபுல் டாஸ் பந்தாக வந்தது. சற்றே மோசமான அந்த பந்தை சற்றும் எதிர்பாராத ஜெய்ஸ்வால் லெக் திசையில் விளாச முற்பட்டார். ஆனால் பந்து பேட்டின் மேல் விளிம்பில் பட்டு காற்றில் உயரே எழும்பியது. அதனை பந்துவீசிய ஸ்டார்க் மிக லாவகமாக ஓடி வந்து கேட்ச் பிடித்து அசத்தினார். இது இடுப்புக்கு மேல் வீசப்பட்ட நோபால் தானா என அம்பயர்கள் உடனடியாக சரிபார்த்தனர். ஆனால் அது முறையான பந்துவீச்சு என உறுதி செய்யப்பட்டதால், 3 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஜெய்ஸ்வால் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

முதல் பந்தில் பிரம்மாண்ட சிக்ஸரை விட்டுக்கொடுத்தாலும், 3வது பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் சீசனில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்து ஸ்டார்க் அசத்தலான பதிலடி கொடுத்துள்ளார். இதன் மூலம் ஸ்டார்க் தனது முதல் போட்டியிலேயே முத்திரையை பதித்துள்ளார். ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்ததை தொடர்ந்து துருவ் ஜூரெல் புதிய பேட்ஸ்மேனாக களமிறங்கினார். அடுத்த ஓவரில் வைபவ் சூர்யவன்ஷி 2 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

Story first published: Friday, May 1, 2026, 19:48 [IST]
Other articles published on May 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+