IPL 2026: மணிக்கு 150 கிமீ. வேகத்தில் பந்துவீசிய ரபாடா.. ஸ்டம்புகள் சிதற அவுட்டான சூர்யகுமார் யாதவ்
அகமதாபாத்: ஐபிஎல் 2026 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் ரபாடா, மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமாரை கிளீன் போல்ட் ஆக்கினார். ஓவரின் துவக்கத்தில் சிக்ஸர், பவுண்டரிக்கு அடிவாங்கிய ரபாடா வீசிய 150 கி.மீ வேக மின்னல் பந்தில், யாதவ்வின் ஆஃப், மிடில் ஸ்டம்புகள் தகர்ந்தன.
பிட்ச்-அப் பந்தாயினும், அதிவேகத்தால் திணறிய சூர்யகுமார் யாதவ் அடிக்க முயல, பந்து பேட்-பேட் இடுக்கில் புகுந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. இந்த 'ரிடெம்ப்ஷன்’ விக்கெட்டை ரபாடா குதூகலத்துடன் கொண்டாடினார். இது டி20களில் சூர்யகுமார் யாதவை அவர் வீழ்த்துவது ஐந்தாவது முறை. சூர்யகுமார் நடப்பு தொடரில் தொடர்ந்து பேட்டிங்கில் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் தடுமாறுகிறார்.

நடப்பு பவர் ப்ளேவில் அதிக விக்கெட்டுகளை (7) வீழ்த்தி ரபாடா சாதனை படைத்து, ஜோஃப்ரா ஆர்ச்சரின் (6 விக்கெட்) சாதனையை முறியடித்தார். சூர்யகுமார் யாதவ் தவிர, மும்பை தொடக்க வீரர்களான டேனிஷ் மாலெவார் (4 பந்தில் 2 ரன்), குயின்டன் டி காக் (11 பந்தில் 13 ரன்) ஆகிய இருவரையும் வெளியேற்றி, குஜராத்திற்கு சிறப்பான துவக்கத்தை கொடுத்தார்.
8 ஓவர் முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. நாமன் தீர் (21 ரன், 20 பந்து), திலக் வர்மா (4 ரன், 3 பந்து) களத்தில் ஆடி வந்தனர். கொல்கத்தாவுக்கு எதிரான ஒரே ஒரு ஆட்டத்தை வென்ற மும்பை, தொடர்ந்து நான்கு தோல்விகளால் ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மறுபுறம், ஐந்து ஆட்டங்களில் மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ள குஜராத், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH), டெல்லி கேபிடல்ஸ் அணிகளுடன் சம புள்ளிகள் பெற்றாலும், மோசமான நிகர ரன் ரேட் (NRR) காரணமாக ஆறாவது இடத்தில் உள்ளது. கடந்த சீசனில் மூன்று முறை மோதியதில், குஜராத் இரண்டு முறையும், மும்பை ஒரு முறையும் வென்றன.


Click it and Unblock the Notifications