Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: க்ருணால் பாண்டியா செய்த செயல்.. மிரண்டு போன காவ்யா மாறன்.. பரவும் 'ரியாக்‌ஷன்' வீடியோ

ஹைதராபாத்: 2026 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் மைதானத்தில் ஹைதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் கொடுத்த ஒரு முகபாவனை தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. பெங்களூரு வீரர் க்ருணால் பாண்டியா வீசிய ஒரு வினோதமான பந்துவீச்சைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் க்ருணால் பாண்டியா, இந்த சீசன் முழுவதும் தனது பந்துவீச்சில் பல மாற்றங்களைச் செய்து வருகிறார். சாதாரண சுழற்பந்து வீச்சைத் தவிர்த்து, திடீரென வேகப்பந்து வீச்சாளர் போல வேகத்தை அதிகரிப்பதையும், பேட்ஸ்மேன்களைக் குழப்ப பவுன்சர்களை வீசுவதையும் அவர் வழக்கமாக வைத்துள்ளார்.

IPL 2026 Kavya Maran s Reaction to Krunal Pandya s Spin-Bouncer attracts fans

அதிர்ச்சியில் காவ்யா மாறன்

ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தபோது, ஆட்டத்தின் 17-வது ஓவரில் இந்தச் சம்பவம் நடந்தது. நிதீஷ் குமார் ரெட்டி பேட்டிங் செய்துகொண்டிருக்க, க்ருணால் பாண்டியா திடீரென ஒரு மிக வேகமான பவுன்சரை வீசினார். எதிர்பாராத விதமாக வந்த அந்தப் பந்து பேட்ஸ்மேனின் தலைக்கு மிக உயரமாகச் சென்றதால் நடுவர் அதனை 'வைடு' என அறிவித்தார். ஒரு சுழற்பந்து வீச்சாளர் இப்படி பவுன்சர் வீசியதைக் கண்ட காவ்யா மாறன், "என்ன இது?" என்பது போலக் கண்கள் விரிய வியப்புடன் பார்த்தார். அவரது அந்த 'ரியாக்‌ஷன்' தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்தது.

க்ருணால் பாண்டியாவின் ஆட்டம்

பந்துவீச்சில் வைடு கொடுத்தாலும், க்ருணால் பாண்டியா பின்னர் அபாரமாகச் செயல்பட்டார். ஹைதராபாத்தின் அதிரடி வீரர் ஹென்றிச் கிளாசனின் விக்கெட்டை அவர் வீழ்த்தினார். 2 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அவர், பேட்டிங்கிலும் அசத்தினார். 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பெங்களூரு அணி ஆடியபோது, க்ருணால் பாண்டியா 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

CSK: தோனி இருக்கும் வரை சிஎஸ்கே பக்கமே வர மாட்டோம்.. பின்வாங்கிய பயிற்சியாளர்கள்.. என்ன நடந்தது?

CSK: தோனி இருக்கும் வரை சிஎஸ்கே பக்கமே வர மாட்டோம்.. பின்வாங்கிய பயிற்சியாளர்கள்.. என்ன நடந்தது?

வெற்றியும் பிளே-ஆப் வாய்ப்பும்

இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இருப்பினும், பெங்களூரு அணி 200 ரன்களை எட்டியதால் ரன் ரேட் அடிப்படையில் பாதிப்பின்றி தப்பித்தது. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் 2026 பிளே-ஆப் சுற்றின் முதல் 3 இடங்கள் உறுதியாகியுள்ளன. பெங்களூரு, குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகள் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளன. கடைசி 4-வது இடத்தைப் பிடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Story first published: Saturday, May 23, 2026, 10:26 [IST]
Other articles published on May 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+