Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ஃபில்டர் எறிந்த பந்தை தடுத்ததாக கூறி KKR வீரர் ரன் அவுட்.. LSG அப்பீலால் வெடித்த சர்ச்சை

ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ஆங்கிரிஷ் ரகுவன்ஷி பந்தை தடுக்கும் வகையில் ஓடினார்' எனக் கூறி அவுட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஐந்தாவது ஓவரின் கடைசிப் பந்தில் ஆங்கிரிஷ் பந்தை மிட்-ஆனில் தட்டி ஒரு ரன் எடுக்க முயற்சித்தார். எதிர்முனையில் நின்ற கேமரூன் கிரீன் அதனை மறுக்க, ஆங்கிரிஷ் திரும்பி ஓடினார். அப்போது முகமது ஷமி ஸ்டம்பை நோக்கி எறிந்த பந்து ரகுவன்ஷியின் முதுகில் தாக்கியது.

முதலில் கள நடுவர்கள் கடந்து சென்றனர். ஆனால் லக்னோ கேப்டன் ரிஷப் பந்த் கள நடுவர்களிடம் முறையிட, ரகுவன்ஷி வேண்டுமென்றே திசையை மாற்றியதாகக் கூறினார். மூன்றாவது நடுவர் ரோஹன் பண்டிட் அதை ஆய்வு செய்து, பந்தைப் பார்த்தபடி திசையை மாற்றியதால் ஆங்கிரிஷை அவுட் என அறிவித்தார்.

IPL 2026: நாங்க விளையாடும் போது ஆடுகளம் சரியில்லை.. தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து

IPL 2026: நாங்க விளையாடும் போது ஆடுகளம் சரியில்லை.. தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து

இந்த அவுட் KKR அணியை அதிருப்தியடையச் செய்தது. பெவிலியனுக்குத் திரும்பும்போது ஆங்கிரிஷ் கோபத்தில் தனது பேட்டையையும் ஹெல்மெட்டையும் தூக்கி எறிந்தார். பயிற்சியாளர் அபிஷேக் நாயர், நான்காவது நடுவருடன் மைதானத்திற்கு வெளியே வாக்கு வாதத்தில் ஈடுபாட்டார்.

பந்தை தடுக்கும் வகையில் ஓடுவது, அவுட்டாவதை தடுக்கும் வகையில் பந்தைத் தடுத்தாலோ அல்லது ஃபில்டர்களுக்கு இடையூறு செய்தாலோ, அது அவுட்டாகும். விதி 37.1.4ன் படி, "சந்தேகத்திற்கு இடமின்றி, விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடும் ஒரு பேட்டர் சரியான காரணம் இல்லாமல் தனது திசையை கணிசமாக மாற்றினார் என்றும், அதன் மூலம் ரன் அவுட்டை தடுத்தார் என்றும் நடுவர் கருதினால், என்றால் obstructing the field என்ற முறைப்படி அவுட் வழங்கலாம்.

எனினும், ஆங்கிரிஷின் திசை மாறி வேண்டுமென்றே செல்லவில்லை என அப்போதைய வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து விவாதத்தைத் தூண்டியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இந்த முறையில் அவுட் செய்யப்பட்ட நான்காவது வீரர் ஆங்கிரிஷ் ரகுவன்ஷி ஆவார்.

IPL 2026: ஐயா! தோனி ஐயா! மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த சஞ்சு சாம்சன்.. அதிர்ந்த சுப்மன் கில்

IPL 2026: ஐயா! தோனி ஐயா! மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த சஞ்சு சாம்சன்.. அதிர்ந்த சுப்மன் கில்

இவருக்கு முன் இந்த பட்டியலில் உள்ளவர்கள். யூசுப் பதான் (KKR vs புனே வாரியர்ஸ், மே 15, 2013), அமித் மிஷ்ரா (டெல்லி கேபிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மே 8, 2019), ரவீந்திர ஜடேஜா (சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், மே 12, 2024). இறுதியாக ஆங்கிரிஷ் ரகுவன்ஷி (KKR vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ஏப்ரல் 26, 2026) இணைந்துள்ளார்.

Story first published: Sunday, April 26, 2026, 21:17 [IST]
Other articles published on Apr 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+