IPL 2026: கடைசி ஓவரில் 2 பீமர் பந்துகள் வீசிய கார்த்திக் தியாகி.. தண்டிக்காத நடுவர்.. விதி என்ன?
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை கேகேஆர் அணி சூப்பர் ஓவரில் தோற்கடித்து பரபரப்பான வெற்றியைப் பதிவு செய்தது. கார்த்திக் தியாகியின் 'நோ-பால்' சர்ச்சையும், முகமது ஷமியின் கடைசிப் பந்து சிக்ஸரும் இந்த ஆட்டத்தை பெரும் பரபரப்பாக்கியது.
லக்னோவில் உள்ள எகானா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், KKR அணிக்குக் கடைசி ஓவரில் 16 ரன்களைக் காக்க வேண்டிய சவால் இருந்தது. கார்த்திக் தியாகி பந்து வீச வந்தபோது, அது ஐபிஎல் வரலாற்றின் மிக குழப்பமான தருணங்களில் ஒன்றாக மாறியது.

தியாகி ஓவரைத் தொடங்கிய விதமே பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அவர் ஹிம்மத் சிங்குக்கு வீசிய முதல் இரண்டு பந்துகளும் இடுப்பு உயர ஃபுல் டாஸ்கள் ஆனது. அவை உடனடியாக 'நோ-பால்' என்று நடுவர்களால் அறிவிக்கப்பட, களத்தில் குழப்பமும் விவாதமும் வெடித்தது.
சாதாரணமாக, இத்தகைய இரண்டு 'நோ-பால்' பந்துகள் வீசினால், அவர் ஓவரை தொடர நடுவரால் தடுக்கப்படுவார். ஆனால், , நடுவர்கள் தியாகி தொடர்ந்து பந்து வீச அனுமதித்தனர். இரண்டாவது பந்து இடுப்பு உயரத்திற்கு மேல் இருந்தும், அது 'அபாயகரமானது' அல்ல என்று தீர்ப்பளித்தனர்.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தியாகி தன்னைச் சமாளித்து, ஒரு 'ஃப்ரீ ஹிட்' பவுண்டரிக்குப் பிறகு ஹிம்மத் சிங்கை ஆட்டமிழக்கச் செய்தார். ஆனால் பதற்றம் குறையவில்லை. கடைசிப் பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முகமது ஷமி ஒரு அதிரடி சிக்ஸர் அடித்து ஸ்கோரை சமன் செய்து, சூப்பர் ஓவர் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இறுதியில், கொல்கத்தா அணி சூப்பர் ஓவரில் தங்கள் நிதானத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது. சுனில் நரைன் அழுத்தத்தில் சிறப்பாகச் செயல்பட, ரிங்கு சிங் முக்கியமான ஒரு பவுண்டரி அடித்து KKR வெற்றியை உறுதி செய்தார்.
கார்த்திக் தியாகி மீண்டும் பந்து வீச அனுமதிக்கப்பட்டதற்கான ஐபிஎல் போட்டி விதிமுறைகள் முக்கியமானவை. விதி 41.7.1 படி"கிரீஸில் நிமிர்ந்து நிற்கும் பேட்ஸ்மேனின் இடுப்பு உயரத்திற்கு மேல் பிட்ச் ஆகாமல் செல்லும் எந்த ஒரு பந்தும் விதிக்கு மீறிய பந்தாக கருதப்படும், அது உடல் ரீதியான காயத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றாலும். பந்துவீச்சாளர் அத்தகைய பந்தை வீசினால், நடுவர் உடனடியாக நோ-பால் என சைகை செய்ய வேண்டும்."
மேலும், விதி 41.7.2 விளக்குகிறது: "41.7.1-ல் வரையறுக்கப்பட்ட ஒரு பந்தை வீசுவது நடுவரின் பார்வையில் பேட்ஸ்மேனுக்கு காயம் ஏற்படும் அபாயம் இருந்தால் அது ஆபத்தானதாகும். இந்தத் தீர்ப்பை அளிக்கும்போது, நடுவர் பேட்ஸ்மேன் அணிந்திருக்கும் பாதுகாப்பு உபகரணங்களைக் கருத்தில் கொள்ளக் கூடாது, மேலும் பந்தின் வேகம், உயரம், திசை, பேட்ஸ்மேனின் திறன் மற்றும் அத்தகைய பந்துகளின் தொடர்ச்சியான தன்மை ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்." கார்த்திக் தியாகியின் 2வது பந்து, பீமர் பந்தாக இல்லை என்பதால், அவர் தொடர்ந்து பந்துவீச அனுமதிக்கப்பட்டார்.


Click it and Unblock the Notifications