IPL 2026: ரஹானேவால் சர்ச்சையில் சிக்கிய ரூ. 25.2 கோடி ஆஸி. வீரர்.. பயிற்சியில் தந்த பதிலடி
கொல்கத்தா: ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன், பந்துவீசத் தொடங்கியுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு முன்னதாக, ஈடன் கார்டன்ஸில் அவர் வலைப்பயிற்சியில் பந்துவீசும் வீடியோவை KKR தனது X தளத்தில் வெளியிட்டுள்ளது. ₹25.20 கோடிக்கு வாங்கப்பட்ட கிரீன், முதல் ஆட்டத்தில் பந்துவீசாததால் பெரும் சர்ச்சை உருவானது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக KKR விளையாடிய முதல் ஐபிஎல் 2026 போட்டியில், 26 வயதான கிரீனை கேப்டன் அஜிங்க்யா ரஹானே பந்துவீசப் பயன்படுத்தவில்லை. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் அறிவுறுத்தலின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என ரஹானே தெரிவித்தார். ஐபிஎல்லில் பந்துவீசுவதற்கு கிரீனுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தாகவும் செய்திகள் பரவின.

ரஹானேவின் போட்டிக்குப் பிந்தைய இந்தக் கருத்துகள் கிரீன் மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மீது கடுமையான விமர்சனங்களை ஈர்த்தன. ஆயினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டிக்கு முந்தைய நாள், கிரீன் வலைப்பயிற்சியில் பந்துவீசக் காணப்பட்டார். KKR-ன் சமூக வலைத்தளப் பதிவுகள் இதை உறுதிப்படுத்தின.
மூன்று அணிகளுக்காக ஆடிய 30 ஐபிஎல் போட்டிகளில், மார்ச் 29 அன்று நடந்த KKR-MI போட்டி தவிர மற்ற 29 ஐபிஎல் ஆட்டங்களிலும் குறைந்தது ஒரு ஓவராவது பந்துவீசியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்காக 28 T20I போட்டிகளில் 14 விக்கெட்டுகளும், ஐபிஎல்லில் 16 விக்கெட்டுகளும் எடுத்துள்ள அவரது மிதவேகப் பந்துவீச்சு இந்த ஆண்டு KKR அணிக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
224 ரன்களைப் பாதுகாக்க KKR தவறிய நிலையில். ஆட்டத்திற்குப் பிறகு, கிரீன் ஏன் பந்துவீசவில்லை என்று ரஹானேவிடம் கேட்கப்பட்டது. அதற்கு கேப்டனான அவர் சற்றும் தயங்காமல், "அந்தக் கேள்வியை நீங்கள் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் தான் கேட்க வேண்டும்," என்று பதிலளித்தார். இக்கருத்து கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை தூண்டியது.
இதற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) இதற்குப் பதிலளித்தது. கிரீனுக்குமுதுகு காயம் இருப்பதாகவும், அதற்கான சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தது. இதனால் அவர் "குறுகிய காலத்திற்கு" பந்துவீசுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறியது. "கேமரூன் தற்போது இந்தியாவில் தனது பந்துவீச்சு சுமையை மீண்டும் உருவாக்கி வருகிறார். சுமார் 10-12 நாட்களில் அவர் திரும்பிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பிரச்னை குறித்து KKR அணிக்குத் தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கும் இந்தத் தகவல் முழுமையாகத் தெரியும்," என்றார்.


Click it and Unblock the Notifications