Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: வருண் சக்கரவர்த்தி கிரிக்கெட் வாழ்வு முடிந்ததா? KKR பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஓபன் டாக்!

மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 'மிஸ்டரி ஸ்பின்னர்' என்று அழைக்கப்படும் வருண் சக்கரவர்த்தியின் சமீபத்திய ஆட்டம் அந்த அணிக்குச் சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில போட்டிகளாக அவர் எதிர்பார்த்த அளவுக்கு விக்கெட்டுகளை வீழ்த்தாமல் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து வருகிறார். இதை அடுத்து வருண் சக்கரவர்த்தியின் "மிஸ்டரி ஸ்பின்" இனி எடுபடாது என முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். அவரது கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கருத்து தெரிவித்து உள்ளனர். இது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் விளக்கம் அளித்துள்ளார்.

2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 48 ரன்களை வாரி வழங்கினார். ரோஹித் சர்மா மற்றும் ரிக்கெல்டன் இவரது பந்துவீச்சை மிக எளிதாக எதிர்கொண்டு ரன்களைக் குவித்தனர். இதேபோல் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் 14 விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும், அவரது எகானமி ரேட் 9.24 ஆக இருந்தது கவலையை ஏற்படுத்தியது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 47 ரன்களை விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.\

IPL 2026 KKR Coach Abhishek Nayar Addresses Varun Chakaravarthy s Recent Form Slump in IPL 2026

இது குறித்துப் பேசிய அபிஷேக் நாயர், "ஒரு வீரராக வருண் சக்கரவர்த்தி தனது வாழ்க்கையில் பல சவால்களைக் கடந்து வந்துள்ளார். அவருக்கு அணி நிர்வாகமும், பயிற்சியாளர்களும் முழு ஆதரவையும் வழங்குகிறோம். தற்போது எதிரணிகள் அவரை மிக நுணுக்கமாகக் கவனித்துத் திட்டமிட்டு விளையாடுகின்றன. இதற்காக அவர் மீண்டும் ஃபார்முக்கு வரமாட்டார் என்று அர்த்தமல்ல. அவர் மனரீதியாக இப்போது மிகவும் வலுவாக இருக்கிறார். நிச்சயம் பழையபடி விக்கெட்டுகளை வீழ்த்தி கர்ஜிப்பார்" என நம்பிக்கை தெரிவித்தார்.

வருண் சக்கரவர்த்தி இந்திய அணிக்காக விளையாடிய பிறகு அவர் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் எதிரணி பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சு முறையை ஆராய்ந்து, மிடில் ஓவர்களில் அவர் வரும்போது அவரை நிலைகுலைய வைக்க அதிரடியைக் கையாள்கின்றனர். ஒரு சிறிய தவறு செய்தாலும் பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகளை விளாசுகின்றனர். ஆனாலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இக்கட்டான நேரங்களில் தொடர்ந்து வருணை நம்பியே பந்துவீச அழைக்கிறது. வரும் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற பேட்டிங்கில் வலுவான அணிகளுக்கு எதிராக வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Thursday, April 2, 2026, 14:42 [IST]
Other articles published on Apr 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+