Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“எங்க டீமுக்கு வந்துருங்க”.. ராகுல் டிராவிட்டுக்கு அழைப்பு விடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி, தற்போது தலைமை இல்லாமல் தவித்து வருகிறது. தலைமைப் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் அணியிலிருந்து வெளியேறிய நிலையில், அடுத்த பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட்டின் 'பெருஞ்சுவர்' ராகுல் டிராவிட்டை அணிக்குள் கொண்டு வர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் முயற்சி செய்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இது நடப்பது அவ்வளவு சுலபமல்ல என்கிறது கிரிக்கெட் வட்டாரம்.

ராஜஸ்தானிலிருந்து வெளியேறிய டிராவிட்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ராகுல் டிராவிட் வெளியேறி இருக்கிறார். அந்த அணியின் பயிற்சியாளராக ஓராண்டு இருந்த நிலையில் அவர் வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில், அவரை தங்கள் பக்கம் இழுக்க கொல்கத்தா அணி திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கட் மைசூர், தற்போது கரீபியன் பிரீமியர் லீக் (CPL) தொடருக்காக அங்கு சென்றுள்ளார். அவர் இந்தியா திரும்பியதும், டிராவிட்டை நியமிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2026 KKR Has Eyes on Rahul Dravid Will the Deal Go Through

டீல் ஓகே ஆகாததற்கு காரணம் என்ன?

கொல்கத்தா அணி டிராவிட்டை விரும்பினாலும், டிராவிட் இந்தப் பொறுப்பை ஏற்பாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. கடந்த 7-8 ஆண்டுகளாக இந்திய அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் எனத் தொடர்ந்து பயிற்சிப் பணியில் ஈடுபட்டுள்ளதால், தற்போது அதிலிருந்து ஒரு சிறிய ஓய்வு எடுத்துக்கொண்டு, குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடவே டிராவிட் விரும்புவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்தும் குடும்பத்திற்காகவே அவர் விலகினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கூட, கூடுதல் பொறுப்புகளுடன் ஒரு பெரிய பதவியை ஏற்க அவர் மறுத்துவிட்டார். இந்நிலையில், கொல்கத்தா அணி பல ஆண்டுகள் நீடிக்கும் ஒரு ஒப்பந்தத்தைக் கொடுக்க நினைத்தாலும், டிராவிட் அதை ஏற்பது சந்தேகம்தான்.

பல்வேறு சிக்கல்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பயிற்சியாளர் பிரச்னை ஒருபுறம் இருக்க, அணிக்குள்ளும் பல குழப்பங்கள் நிலவி வருகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சஞ்சு சாம்சனை டிரேடிங் மூலம் அணிக்குள் கொண்டு வர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முயற்சிப்பதாகவும், அதற்குப் பதிலாக வெங்கடேஷ் ஐயரை விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் செய்திகள் பரவின. ஆனால், "அப்படி எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை" என வெங்கடேஷ் ஐயரே திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

கேப்டன்சியும் ஒரு பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கடந்த சீசனின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே, அணியை ப்ளே-ஆஃப் சுற்றுக்குக் கூட அழைத்துச் செல்லத் தவறினார். துணை கேப்டன் வெங்கடேஷ் ஐயரும் ஃபார்ம் இழந்து தவித்தார்.

மொத்தத்தில், ஒரு நல்ல பயிற்சியாளர் இல்லை, நிலையான கேப்டன் இல்லை, வீரர்களை டிரேடிங் செய்வதிலும் சிக்கல் எனப் பலமுனைத் தாக்குதலில் சிக்கியுள்ளது கொல்கத்தா அணி. இந்தச் சிக்கல்களையெல்லாம் சரிசெய்து, அடுத்த சீசனுக்கு ஒரு வலுவான அணியை உருவாக்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் பெரும் முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கும் என்பது மட்டும் உறுதி.

Story first published: Monday, September 1, 2025, 9:58 [IST]
Other articles published on Sep 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+