IPL 2026: இந்த தமிழக வீரரை அனுப்பினாலே KKR அணிக்கு பல கோடி ரூபாய் கிடைக்கும்.. ஆகாஷ் சோப்ரா பேச்சு
மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டுக்கான இறுதிக்கட்ட பணிகளில் ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் எந்த வீரர்களை விடுவிக்கின்றோம் என்பது குறித்து வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்ற கெடு விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, கொல்கத்தா அணி எந்த வீரர்களை விடுவிக்க வேண்டும். எவ்வளவு பணத்துடன் ஏலத்திற்கு செல்ல வேண்டும் என்பது குறித்து பேசி இருக்கிறார். அதில் என்னை கேட்டால் கேகேஆர் அணியின் மிகப்பெரிய ஒரு முடிவாக வெங்கடேஷ் ஐயரை வெளியே அனுப்ப வேண்டும்.

ஏனென்றால் கடந்த ஏலத்தில் 23 கோடி ரூபாய்க்கு மேல் அவருக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பணத்துக்கு ஏற்ற வகையில் வெங்கடேஷ் ஐயர் விளையாட வில்லை. அது அவருக்கு மிகவும் அதிகமான கொடுக்கப்பட்ட தொகையாக மாறிவிட்டது. இதனால் வெங்கடேஷ் ஐயரை நீங்கள் விடுவித்தால் உங்கள் கையில் 23 கோடியே 75 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
அதன் மூலம் இந்த மினி ஏலத்தில் உங்களுக்கு கூடுதலாக 5 கோடி ரூபாய் வழங்கப்படும். இதன் மூலம் ஒரு நல்ல தொகையை வைத்துக்கொண்டு நீங்கள் வீரர்களை மீண்டும் தேர்வு செய்யலாம். இதேபோன்று கேகேஆர் அணி தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் ஆண்ரிச் நோக்கியாவையும் வெளியே அனுப்ப வேண்டும்.
அவருக்கு ஆறரை கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறீர்கள். ஆனால் அவர் கடைசியாக எப்போது விளையாடினார் என்று உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா. அவர் திறமை வாய்ந்த பவுலர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுகிறது. எனவே அவரையும் விடுவிக்க வேண்டும்.
இதேபோன்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்பென்சர் ஜான்சனை 2 கோடியே 80 லட்சம் கொடுத்து வாங்கினார்கள். அவர் மிட்செல் ஸ்டார்க்கு மாற்றுவீராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் எந்த ஒரு ஸ்பெஷலான செயல்பாட்டையும் போட்டிகளில் செய்யவில்லை. அதேசமயம் அவருக்கு விளையாட அதிக வாய்ப்பு தரப்படவில்லை.
தற்போது எனக்குள் இருக்கும் மிகப்பெரிய கேள்வியே ரகானவை நீங்கள் வைத்திருப்பீர்களா? இல்லை விடுவிப்பீர்களா என்பதுதான். அவர் ஒரு நல்ல கேப்டன். ஆனால் தொடக்க வீரராக அவர் களமிறங்கவில்லை என்றால் அவருக்கு எந்த ஒரு இடத்தை நீங்கள் உருவாக்கவில்லை என்றால் அவரை விடுவிக்கலாம். ஒருவேளை அணியில் அவர் இருந்தால் அவரை தான் கேப்டனாக நீங்கள் அறிவிக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications