Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: இதுவரை 16,776 டி20 போட்டிகளில் இப்படி நடந்ததே இல்லை.. 6 பேட்ஸ்மேன்கள் சேர்ந்து சாதனை

கொல்கத்தா: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 60-வது ஐபிஎல் லீக் ஆட்டம், சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் விளையாடப்பட்டுள்ள 16,776 டி20 போட்டிகளில் இல்லாத வகையில், ஒரே போட்டியில் 6 வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்து உலக சாதனை படைத்துள்ளனர்.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 247 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய குஜராத் அணி 218 ரன்கள் எடுத்துப் போராடித் தோல்வியடைந்தது. கொல்கத்தா அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், இரு அணிகளிலும் தலா 3 பேட்ஸ்மேன்கள் அரைசதத்தை கடந்ததால் இந்த அரிய சாதனை நிகழ்ந்துள்ளது.

IPL 2026 KKR vs GT Six Players Smash Fifties in a Single Game Creates World Record in T20 History

பேட்ஸ்மேன்களின் ராஜ்ஜியம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் தொடக்க வீரர் பின் ஆலன் அதிரடியாக 35 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார். அவரைத் தொடர்ந்து அங்கிரிஷ் ரகுவன்ஷி 44 பந்துகளில் 82 ரன்களும், கேமரூன் கிரீன் 28 பந்துகளில் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 248 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணியிலும் பேட்ஸ்மேன்கள் சளைக்காமல் பதிலடி கொடுத்தனர். கேப்டன் சுப்மன் கில் 49 பந்துகளில் 85 ரன்கள் குவித்து அசத்தினார். நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் 35 பந்துகளில் 57 ரன்களும், தமிழக வீரர் சாய் சுதர்சன் 28 பந்துகளில் 53 ரன்களும் விளாசினர். இவ்வாறாக ஆறு பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்தனர்.

சாதனைப் பட்டியல்

டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 16,776 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 16,124 போட்டிகள் முடிவுகளைத் தந்துள்ளன, 231 போட்டிகள் டிரா ஆகியுள்ளன. ஆனால், இதுவரை நடந்த எந்தவொரு போட்டியிலும் ஒரே ஆட்டத்தில் 6 வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் எடுத்தது கிடையாது. ஐபிஎல் 2026 தொடரின் இந்தப் போட்டி அந்தப் பெருமையைப் பெற்றுள்ளது.

சாய் சுதர்சன் சாதனை

இதே போட்டியில் குஜராத் அணியின் சாய் சுதர்சன் மற்றொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். டி20 கிரிக்கெட்டில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் (78 இன்னிங்ஸ்) 3,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் 85 இன்னிங்ஸ்களில் எடுத்ததே சாதனையாக இருந்தது.

Story first published: Sunday, May 17, 2026, 9:22 [IST]
Other articles published on May 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+