IPL 2026: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி பிளேயிங் 11 மற்றும் டாஸ் விவரம்!
கொல்கத்தா: 2026 ஐபிஎல் தொடரின் 6வது லீக் போட்டியில் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் இஷான் கிஷன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இருப்பதாலும், வானிலை சற்று மேகமூட்டத்துடன் இருப்பதாலும் முதலில் பந்துவீச முடிவு செய்ததாக ரஹானே தெரிவித்தார். பனிப்பொழிவு எப்படி இருக்கும் என உறுதியாக கூற முடியாது என்றாலும், அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை என அவர் கூறினார். மறுபுறம் பேசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் இஷான் கிஷன், தாங்கள் டாஸ் வென்றிருந்தாலும் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்போம் என கூறினார்.

முதலில் பேட்டிங் செய்வதால் நிலைமையை உணர்ந்து விளையாட வேண்டும் எனவும், நெருக்கடியான நேரங்களில் பதற்றமடையாமல் திட்டங்களை சரியாக செயல்படுத்துவதே முக்கியம் எனவும் அவர் தெரிவித்தார். அந்த அணியில் பந்துவீச்சை வலுப்படுத்தும் நோக்கில் ஷிவாங் மட்டும் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தப் போட்டி நடைபெறும் 5வது எண் கொண்ட ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதே ஆடுகளத்தில் தான் சமீபத்தில் நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன் 33 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசி இருந்தார். மைதானத்தின் பவுண்டரி எல்லைகள் 61 மீட்டர், 68 மீட்டர் மற்றும் நேராக 74 மீட்டர் என இருப்பதால் அதிக சிக்ஸர்கள் பறக்க வாய்ப்புள்ளது.
கடந்த சீசனில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிகளின் சராசரி ஸ்கோர் 199 ஆக இருந்தது. எனவே இந்தப் போட்டியிலும் 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்படும் என வர்ணனையாளர்கள் முரளி கார்த்திக் மற்றும் சைமன் டௌல் தெரிவித்தனர். தொடக்க ஓவர்களில் மட்டும் பந்து லேசாக ஸ்விங் ஆகலாம், மற்றபடி பந்துவீச்சாளர்களுக்கு இது ஒரு கடுமையான போட்டியாகவே அமையும். இலக்கை விரட்டும் அணிக்கே இங்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.
அணிகள் விவரம்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (ஆடும் லெவன்): அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சலில் அரோரா, ஹர்ஷ் துபே, ஷிவாங் குமார், ஜெய்தேவ் உனட்கட், டேவிட் பேய்ன்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (இம்பாக்ட் பிளேயர்ஸ்): ஹர்ஷல் படேல், லியாம் லிவிங்ஸ்டோன், ஈஷன் மலிங்கா, ஆர் ஸ்மரன், சாகிப் உசேன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஆடும் லெவன்): அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), கேமரூன் கிரீன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ரமன்தீப் சிங், அனுகுல் ராய், சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா, கார்த்திக் தியாகி, பிளெஸ்ஸிங் முசரபானி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இம்பாக்ட் பிளேயர்ஸ்): ஃபின் ஆலன், மனிஷ் பாண்டே, தேஜஸ்வி சிங், சௌரப் துபே, ரோவ்மேன் பவல்


Click it and Unblock the Notifications