IPL 2026: ராகுல் கொடுத்த கேட்சை கோட்டைவிட்ட பஞ்சாப் வீரர்.. அதிர்ச்சியில் உறைந்த பிரீத்தி ஜிந்தா
டெல்லி: ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஷஷாங் சிங், கே.எல். ராகுலின் ஒரு முக்கிய கேட்சை தவறவிட்டார். இதனை கண்டு பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் கடும் விரக்தி அடைந்தனர். கேட்ச் தவறவிட்டதால், தனது ஏமாற்றத்தை ஷஷாங் சிங் வெளிப்படையாகக் காட்டினார்.
ஷஷாங் சிங்குக்கு இது இரண்டாவது தொடர்ச்சியான போட்டியில் தவறவிட்ட கேட்ச் ஆகும். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, சனிக்கிழமை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில், மூன்றாவது ஓவரில் கே.எல். ராகுல் அடித்த ஷார்ட் பந்தை டீப் ஸ்கொயர் லெக் திசையில் பிடித்திருக்க வேண்டிய ஷஷாங் சிங், அதனை நழுவவிட்டார்.

இதனால் தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட ராகுல் தொடர்ந்து அதிகர காட்டினார். 26 பந்துகளில் அரைசதமும், மொத்தமாக 47 பந்துகளில் சதமும் ராகுல் விளாசியுள்ளார். தற்போதைய 2026 ஐபிஎல் சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, ஆறு போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த வலுவான தொடக்கத்தை வரும் டெல்லி கேப்பிடல்ஸ் மோதலிலும் தக்கவைக்க அவர்கள் இலக்கு கொண்டுள்ளனர்.
முன்னதாக பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் ஆல்-ரவுண்டர் கூப்பர் கானோலி, தங்கள் அணியின் 2026 ஐபிஎல் பயணத்தில் அடிப்படை விசயங்களில் கவனம் செலுத்தி, அவற்றை நீண்ட நேரம் செயல்படுத்துவதே வெற்றிக்கான காரணம் எனப் பேசினார். “நாங்கள் எப்போதும் நேர்மறையாகவே இருக்கிறோம். முதல் ஐந்து அல்லது ஆறு ஆட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம். நாங்கள் செய்ததையே தொடர்ச்சியாக வலுப்படுத்தி, அதனை மேற்கொண்டு வருகிறோம்,” என்று கானோலி தெரிவித்தார்.
“நாங்கள் தொடர்ந்து அடிப்படை விசயங்களில் கவனம் செலுத்தி, அவற்றை நீண்ட நேரம் கடைபிடிக்க வேண்டும் என நினைக்கிறோம். இந்தப் போட்டித்தொடரில் ஒவ்வொரு அணியும் மிகவும் வலுவானது. எந்த அணியும் எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும். அதனால், நாங்கள் அடிப்படை விடயங்களைக் கவனமாகப் பின்பற்றி, முன்னோக்கி நகர்ந்து, எங்களின் வழக்கமான உத்திகளுடன் விளையாட விரும்புகிறோம்," என்றார்.
22 வயதான கானோலி, ஆறு போட்டிகளில் 223 ரன்களைக் குவித்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். ஐபிஎல் அனுபவத்தைப் பற்றியும் பேசிய அவர், “இது ஒரு சிறந்த அனுபவம். எங்களிடம் உலகத்தரம் வாய்ந்த ஒரு அணி உள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களிடமிருந்து கற்றுக்கொள்வது, அவர்களுடன் களத்தில் சிறிது நேரம் செலவிடுவது, அவர்களின் ஆட்டத்தைப் பார்ப்பது என அனைத்தும் அற்புதமாக உள்ளது," என்றார்.
“நான் அவர்களுடன் களத்தில் இணைந்து, அவர்களின் ஆட்டத்தைப் பார்த்து, திறமையான பந்துவீச்சை எதிர்கொண்டு, பவர்பிளேயில் பந்துவீச்சாளர்களுக்கு சவாலை உருவாக்குவதைத் தழுவிக்கொள்ள முயற்சிக்கிறேன்,” என்றும் கானோலி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications