Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: 152 ரன்கள் குவித்தது எப்படி? ராகுல் சொன்ன மாஸ் பதில்.. நிதிஷ் ராணாவுக்கு பாராட்டு

டெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கே.எல். ராகுல், ஐபிஎல் 2026 தொடரில் பஞாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தன் வாழ்நபளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் குவிக்க டெல்லி அணியை 264 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ராகுல், இந்தப் போட்டியில் பல்வேறு புதிய சாதனைகளை முறியடித்தார். டெல்லி அணிக்காக அதிவிரைவாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்ற அவர், ரிஷப் பந்தின் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக 128*) சாதனையை முறியடித்தார்.

மேலும், ஐபிஎல் வரலாற்றில் விக்கெட் கீப்பர்களில் அதிக அரைசதங்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற புதிய அத்தியாயத்தைப் படைத்தார். தனது முன்னாள் அணியான பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்து அசத்தினார்.

தனது அசாதாரண ஆட்டத்திற்குப் பிறகு, பேசிய ராகுல், "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதில் சந்தேகமில்லை. வெப்பத்தால் கொஞ்சம் சோர்வாக உணர்கிறேன். நீர்ச்சத்தை அதிகரித்து விரைவில் மீண்டு வர வேண்டும். அதனால் இப்போது கலவையான உணர்வுதான். பின்னர் தசை பிடிப்புகள் வந்துவிடக் கூடாது என நம்புகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ராகுலும் பதும் நிசங்காவும் தொடக்க விக்கெட்டுக்காக 28 ரன்கள் சேர்த்தனர். இலங்கை வீரர் நிசங்கா, அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சில் 7 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா, ராகுலுடன் இணைந்து அதிரடியாக ஆடினார். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 220 ரன்கள் என்ற மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். நிதிஷ் ராணா 91 ரன்கள் எடுத்த நிலையில் சேவியர் பார்ட்லெட் பந்துவீச்சில் அவுட்டானார்.

நிதிஷ் ராணா அவுட்டான பின்னரும் ராகுல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி அணியின் ரன் விகிதத்தை உயர்த்தினார். நிதிஷ் ராணாவின் ஆட்டம் குறித்து ராகுல், "நிதிஷின் ஆட்டம் அற்புதமானது. அவர் களமிறங்கிய விதமும், முதல் ஆறு ஓவர்களில் சரியான கிரிக்கெட் ஷாட்களால் பவுண்டரிகளை அடித்ததும் பந்துவீச்சு அணிக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்தது."

"பெரிய சிக்ஸர்கள் அடிக்க முயற்சிக்கும்போதும், அடித்து ஆட முயற்சிக்கும்போது எதிரணிக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாகத் தோன்றும். ஆனால், நீங்கள் சரியான கிரிக்கெட் ஷாட்களை ஆடி, பந்தின் மெரிட்டைப் பார்த்து அடித்து, தொடர்ந்து பவுண்டரிகளைப் பெறும்போது, 200-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் ஸ்கோர் செய்யும்போது, அது எதிரணிக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்," என்று பாராட்டினார்.

தொடர்ந்து பேசிய ராகுல், "நிதிஷ் அதை அழகாகச் செய்தார். வலது கை, இடது கை காம்பினேஷனும் நன்றாக வேலை செய்தது. பிட்ச் சற்று மெதுவாக இருந்தது. ஆனால், நானும் நிதிஷும் பந்தை நன்றாகப் பார்த்தோம். அதனால் தொடர்ந்து பேட்டிங் செய்து பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தோம்," எனக் குறிப்பிட்டார்.

"ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் மட்டுமே நான் முன்னரே திட்டமிட்டு ஷாட்கள் ஆடினேன். முதல் 70-80 ரன்களுக்கு நான் எதையும் முன்னரே திட்டமிடவில்லை. பவுண்டரிகளை அடித்து பந்துவீச்சாளர்களை அழுத்தத்தில் ஆழ்த்துவதே என் நோக்கமாக இருந்தது. சரியான கிரிக்கெட் ஷாட்களை ஆடுவதுதான் எப்போதும் எனது பலம். அதைத்தான் நான் நம்பி, எனது அணியை 250 ரன்கள் கடக்கச் செய்ய போதுமானது என்று நினைத்து தொடர்ந்து செய்தேன்," என விளக்கினார்.

"கடைசி கட்டத்தில் மட்டுமே பந்துகளை முன்னரே முடிவு செய்து ஆடினேன். ஃபீல்ட் செட் செய்யும்போது, பந்துவீச்சாளர்கள் வைட் ஆஃப் அல்லது ஸ்பின்னர் ஃபீல்ட் வைக்கும்போது என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று தெரிந்துவிடும்," என்றார். இந்த ஆட்டத்தில் ஷஷாங் சிங் ஃபீல்டிங்கில் மிகவும் மோசமாகச் செயல்பட்டார். அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சில் ராகுலின் கேட்சை அவர் கோட்டைவிட்டார். இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திய ராகுல் சதம் அடித்து அணியின் ரன் வித்தியாசத்தை உயர்த்தினார்.

ஷஷாங் சிங் சமீப காலமாக ஃபீல்டிங்கில் திணறி வருகிறார். முந்தைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக மூன்று கேட்சுகளைத் தவறவிட்டார். ராகுலின் கேட்சை மீண்டும் நழுவவிட்டது, அவருக்கு மட்டுமின்றி பஞ்சாப் அணிக்கும் மிகவும் விலை உயர்ந்த தவறாக அமைந்தது.முடிவில், கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் குவிக்க, டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. டேவிட் மில்லர் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Story first published: Saturday, April 25, 2026, 19:40 [IST]
Other articles published on Apr 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+