Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ஆறுதல் வெற்றி கூடப் பெற முடியாமல் தோற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. டெல்லி அபாரம்

கொல்கத்தா: 2026 ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான 70-வது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டி நடந்து கொண்டு இருந்த போதே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சென்றது. அதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இருந்த சிறிய பிளே ஆஃப் வாய்ப்பும் நழுவியது. எனவே, ஆறுதல் வெற்றியாவது பெறலாம் என நினைத்த கொல்கத்தா அணிக்கு அதுவும் கிடைக்கவில்லை.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த கொல்கத்தா அணிக்கு, டெல்லி பேட்டர்கள் ஆரம்பம் முதலே அதிர்ச்சி அளித்தனர். தொடக்க வீரர் கே.எல். ராகுல் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

IPL 2026 Kolkata Knight Riders lost as Delhi Capitals Clinch Dominant 40-Run Victory

அவருக்குத் துணையாக கேப்டன் அக்சர் படேல் 39 ரன்களும், டேவிட் மில்லர் 28 ரன்களும் எடுத்தனர். இறுதி ஓவர்களில் அசுதோஷ் சர்மா அதிரடி காட்ட, டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. கொல்கத்தா தரப்பில் சௌரப் துபே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணிக்கு, ரன் ரேட் அடிப்படையில் பிளே-ஆப் செல்ல இந்த இலக்கை 13 ஓவர்களுக்குள் கடக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. கேப்டன் அஜின்க்யா ரகானே 39 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அதிரடியான தொடக்கத்தைத் தந்தார். ஆனால், மறுமுனையில் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். அதிரடி வீரர் ரிங்கு சிங் ரன் ஏதும் எடுக்காமலும், கேமரூன் கிரீன் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தது கொல்கத்தாவுக்கு பேரிடியாக அமைந்தது.

டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்தார். வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடியும் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தாவின் பின்வரிசையை நிலைகுலையச் செய்தார். இறுதியில் 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Rohit Sharma: ஐபிஎல் சரித்திரத்திலேயே மோசமான ரெக்கார்டை செய்த ரோஹித் சர்மா.. டக் அவுட்டில் சாதனை

Rohit Sharma: ஐபிஎல் சரித்திரத்திலேயே மோசமான ரெக்கார்டை செய்த ரோஹித் சர்மா.. டக் அவுட்டில் சாதனை

ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்ட டெல்லி அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறியது. அதே சமயம், கொல்கத்தா அணி, மோசமான பேட்டிங் காரணமாக 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டு தொடரில் இருந்து வெளியேறியது.

Story first published: Sunday, May 24, 2026, 23:37 [IST]
Other articles published on May 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+