Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சேஸிங் சொர்க்க பூமியில் டாஸ் வென்ற பண்ட்... ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடும் சவால்!

லக்னோ: 2026 ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இது சாதகமான முடிவாக பார்க்கப்படுகிறது. டாஸ் தோற்றாலும் மகிழ்ச்சி என ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் கூறிய நிலையில், சுழற்பந்து வீச்சுக்கு அதிக சாதகமான இந்த செம்மண் ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்யப்போகும் ராஜஸ்தான் அணி எவ்வளவு ரன்களைக் குவிக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்தது.

உள்ளூர் மைதானத்தில் விளையாடும் லக்னோ அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இது குறித்துப் பேசிய கேப்டன் ரிஷப் பண்ட், "மைதானத்தின் தன்மையை நாங்கள் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்து வருகிறோம். கடந்த சில போட்டிகள் எங்களுக்கு மிகவும் சவாலாகவே இருந்தன. இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திக்வேஷ் ரதி, மயங்க் யாதவ் உள்ளே வருகிறார்கள்" என்றார்.

IPL 2026 LSG vs RR Toss Playing Xi Impact Substitutes pitch report and Captain speech

மறுபுறம் ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பேசுகையில், "நான் டாஸ் தோற்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். இது எனக்கு மகிழ்ச்சியே. கடந்த போட்டிகளில் மிடில் ஓவர்களில் சில கணக்கீடுகளை நாங்கள் தவறவிட்டோம். இந்த போட்டியில் 40 ஓவர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். ராஜஸ்தான் அணியில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை" என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் (Playing XI):

யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக் (கேப்டன்), சிம்ரோன் ஹெட்மையர், டொனோவன் ஃபெரேரா, ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ரவி பிஷ்னோய், பிரிஜேஷ் ஷர்மா, நண்ட்ரே பர்கர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் (Impact Subs):

லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ரவி சிங், யாஷ் ராஜ் புஞ்சா, சுபம் துபே, துஷார் தேஷ்பாண்டே.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (Playing XI):

மிட்செல் மார்ஷ், ஆயுஷ் பதோனி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர் / கேப்டன்), நிகோலஸ் பூரன், ஐடன் மார்க்ரம், முகுல் சவுத்ரி, முகமது ஷமி, மொஹ்சின் கான், பிரின்ஸ் யாதவ், திகேஷ் சிங் ரதி, மயங்க் யாதவ்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Impact Subs):

ஹிம்மத் சிங், ஜார்ஜ் லிண்டே, மணிமாறன் சித்தார்த், மேத்யூ ப்ரீட்ஸ்கே, அப்துல் சமத்.

லக்னோவில் உள்ள ஏகானா மைதானம் இந்த ஐபிஎல் தொடரிலேயே மிகக் குறைந்த ரன்கள் பதிவாகும் மைதானமாக உள்ளது. முரளி கார்த்திக் மற்றும் சைமன் கேடிச் ஆகியோர் அளித்த ஆடுகள அறிக்கையின்படி, இந்த செம்மண் ஆடுகளத்தில் நடப்பு தொடரில் அதிக சுழற்பந்து வீச்சு எடுபடுகிறது. இன்று லக்னோவில் 40 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளதால், ஆடுகளத்தின் ஈரப்பதம் குறைந்து போட்டி செல்ல செல்ல பந்து இன்னும் அதிகமாகச் சுழலும் என கணிக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் பவுண்டரி எல்லைகளும் 56, 64 மற்றும் 77 மீட்டர் தூரங்களில் விசாலமாக அமைந்துள்ளதால் பேட்ஸ்மேன்களுக்கு சிக்சர் அடிப்பது மிகவும் சவாலான காரியமாகும்.

புள்ளிவிவரங்களின்படி இங்கு சேஸிங் செய்யும் அணிகளுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. கடந்த 15 போட்டிகளில் 12 முறை சேஸிங் செய்த அணிகளே வெற்றி வாகை சூடியுள்ளன. முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் பிரம்மாண்டமாக ரன் குவித்த அணிகள் மட்டுமே இங்கு வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு 193 ஆக இருந்த முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர், இந்த ஆண்டு வெறும் 153 ஆக சரிந்துள்ளது. எனவே முதலில் பேட்டிங் செய்யும் ராஜஸ்தான் அணி பவர்பிளே ஓவர்களைப் பயன்படுத்தி பெரிய இலக்கை நிர்ணயிக்குமா அல்லது லக்னோவின் சுழலில் சிக்கிச் சுருளுமா? என்று பார்க்கலாம்.

Story first published: Wednesday, April 22, 2026, 19:13 [IST]
Other articles published on Apr 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+