Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சிஎஸ்கே-வை கொத்து பரோட்டா போட்ட லக்னோ.. பவுலர்களை தூக்கி எறிந்த பைசன் மிட்செல் மார்ஷ்

லக்னோ: ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எக்கனா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி, சென்னை அணியின் பிளேஆஃப் வாய்ப்புகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மிட்செல் மார்ஷின் அதிரடியான 90 ரன்கள் இந்த வெற்றிக்கு வழிவகுத்தன.

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ கேப்டன் ரிஷப் பந்தின் அழைப்பின் பேரில் களமிறங்கியது. லக்னோவின் பந்துவீச்சு ஆரம்பத்தில் கட்டுக்கோப்புடன் இருந்தது. ஆகாஷ் சிங் அபாரமாகப் பந்துவீசி, ருதுராஜ் கெய்க்வாட் (13), சாம்சன் (20), உர்வில் படேல் (6) என மூன்று முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி சென்னையின் டாப் ஆர்டரைச் சிதைத்தார். 52/3 என சென்னை அணி தடுமாறி, சவாலை எதிர்கொண்டது.

ஆரம்ப தடுமாற்றத்திற்குப் பிறகு, கார்த்திக் ஷர்மாவும், டெவால்ட் பிரெவிஸும் இணைந்து 70 ரன்கள் குவித்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். இந்த பார்ட்னர்ஷிப்பால், சென்னை அணி மீண்டும் வலுப்பெற்றது. முகமது ஷமியின் பந்துவீச்சில் பிரெவிஸ் 16 பந்துகளில் 25 ரன்களுடன் வெளியேறினார். சிறப்பாக ஆடிய பிரெவிஸ் தனது ஆட்டத்தை பெரிய ஸ்கோராக மாற்றத் தவறிவிட்டார்.

IPL 2026: சிஎஸ்கே அணி வரலாற்றிலே நம்பர் 1 வீரர்.. கார்த்திக் சர்மா அதிரடி சாதனை.. விவரம்

IPL 2026: சிஎஸ்கே அணி வரலாற்றிலே நம்பர் 1 வீரர்.. கார்த்திக் சர்மா அதிரடி சாதனை.. விவரம்

பிரெவிஸ் அவுட்டானாலும், கார்த்திக் ஷர்மா தனியாளாகப் போராடி 42 பந்துகளில் அதிரடியாக 71 ரன்கள் குவித்து அசத்தினார். இவர் ஆட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக இருந்தார். ஷிவம் தூபே 16 பந்துகளில் 32 ரன்கள் குவித்து, அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, கடைசி கட்டத்தில் சொதப்ப, அதிக ரன்களை வாரி வழங்கியது.

ஷஹ்பாஸ் அகமதுவின் பந்துவீச்சில் கார்த்திக் வெளியேற, பிரஷாந்த் வீர் 10 பந்துகளில் 13 ரன்களுடனும், ஷிவம் தூபேயுடன் இறுதிவரை நிலைத்து நின்று, ஸ்கோரை 5 விக்கெட் இழப்பிற்கு 187 ஆக உயர்த்தினர். ஆகாஷ் சிங் 3/26 விக்கெட்டுகள் எடுத்து, அணியின் சிறந்த பங்களிப்பை அளித்தார்.

188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோவுக்கு, ஆஸ்திரேலிய நட்சத்திரங்களான மிட்செல் மார்ஷும் ஜோஷ் இங்லிஸும் அதிரடி துவக்கத்தை அளித்தனர். வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான இந்த பிட்சில், பந்துகள் வேகமாக வந்தாலும், மார்ஷ் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால், சென்னை பந்துவீச்சாளர்களின் திட்டங்களை தகர்த்தார். "தி பைசன்" என வர்ணிக்கப்படும் மார்ஷ், வெறும் 21 பந்துகளில் அதிரடி அரை சதம் கடந்து அசத்தினார்.

பவர்ப்ளே ஓவர்களில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் குவித்து, சென்னை பந்துவீச்சாளர்களைத் திணறடித்தது. எட்டாவது ஓவரிலேயே 100 ரன்களைக் கடந்து மின்னல் வேகத்தில் இலக்கை நோக்கி நகர்ந்தது. மார்ஷ் ஓவரில் கம்போஜ் பந்துவீச்சில் 28 ரன்கள் விளாச, இங்லிஸ் மறுமுனையில் ஸ்ட்ரைக்கைக் கொடுத்து உதவினார். பாதி ஓவர்களுக்குள்ளேயே 124 ரன்களை எட்டி, லக்னோ வெற்றியை உறுதி செய்தது.

லக்னோ அணி மிக எளிதாக வெல்லும் எனக் கருதிய வேளையில், சென்னை பந்துவீச்சாளர்கள் திடீரென விக்கெட்டுகளை வீழ்த்தத் தொடங்கினர். முகேஷ் சவுத்ரியின் பந்துவீச்சில் ஜோஷ் இங்லிஸ் 32 பந்துகளில் 36 ரன்களுடன் வெளியேறினார். அடுத்த பந்திலேயே, நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் நிக்கோலஸ் பூரனின் அடி பவுலரைத் தாக்கி ஸ்டம்ப்பில் பட்டதால், அபாரமாக ஆடிய மிட்செல் மார்ஷ் 90 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அப்துல் சமத் 3 பந்துகளில் 7 ரன்களில் ஜான்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேற, 135/0 என வலுவாக இருந்த லக்னோவின் ஸ்கோர், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 144/3 ஆக மாறியது. இந்த சூழல் சென்னை அணிக்கு ஒரு சிறிய நம்பிக்கையை அளித்தது. மிடில் ஆர்டரில் ரிஷப் பந்த், மார்க்ரம் போன்றோர் களமிறங்காமல், நிக்கோலஸ் பூரன் பொறுப்பேற்றது பலருக்கும் வியப்பை அளித்தது.

ஒரு கட்டத்தில், லக்னோ அணிக்கு 24 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ஆட்டம் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. சென்னை அணிக்கு விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே வாய்ப்பு என்ற சூழ்நிலையில், "ஸ்ட்ரேடஜிக் பிரேக்" எடுக்கப்பட்டது. இந்த அழுத்தமான தருணத்திலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி எளிதாக வெற்றிப் பாதையில் பயணித்தது.

ஆட்டம் சூடுபிடித்ததாக உணர்ந்த வேளையில், நிக்கோலஸ் பூரன் தன் வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அன்ஷுல் கம்போஜின் ஓவரில் அடுத்தடுத்து வானுயர நான்கு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, சென்னையின் கடைசி நம்பிக்கையையும் தகர்த்தார். இந்த அதிரடி ஆட்டத்தால், லக்னோ 150 ரன்களைக் கடந்தது.

முகேஷ் சவுத்ரி மற்றும் குர்ஜப்நீத் சிங் பந்துவீச்சிலும் பவுண்டரிகள் விளாசப்பட்டன. முகுல் சவுத்ரி 17 (10) ரன்களுடனும், பூரண் 32 (17) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் அணியை 16.4 ஓவரில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இன்னும் 20 பந்துகள் மீதமிருந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஒரு அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தது.

போட்டிக்குப் பிறகுப் பேசிய லக்னோவின் துவக்க ஆட்டக்காரர் ஜோஷ் இங்லிஸ், "ஒவ்வொரு போட்டியையும் வெல்வது முக்கியம் என்றும், சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் அணிக்கு முன்னதாகப் பேசினோம். மிட்செல் மார்ஷின் ஆட்டம் ஆச்சரியமாக இருந்தது. நான் சும்மா நின்று கொண்டிருந்தேன் என்று தோன்றியது." என்றார்.

IPL 2026: சிஎஸ்கே, லக்னோ அணி வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடிய காரணம் என்ன?

IPL 2026: சிஎஸ்கே, லக்னோ அணி வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடிய காரணம் என்ன?

"பிட்ச் பந்துவீச்சாளர்களுக்குச் சற்று சாதகமாக இருந்தது. அன்ஷுல் கம்போஜ் சரியாக பவுன்ஸ் பந்துகள் வீசவில்லை. நூர் அகமது எவ்வளவு ஆபத்தானவர் என்று எங்களுக்குத் தெரியும், அதனால் அவருக்கு எதிராக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள எங்கள் கிரவுன்ட் போலவே இந்த பிட்ச் இருந்தது, பந்து பேட்க்கு நன்றாக வந்தது." என்றும் குறிப்பிட்டார்.

Story first published: Friday, May 15, 2026, 23:46 [IST]
Other articles published on May 15, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+