IPL 2026: பண்ட் எடுத்த துணிச்சலான முடிவு.. ஸ்ரேயாஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது ஏன்?
சண்டிகர்: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 29 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. முல்லன்பூரில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் ஒரு துணிச்சலான முடிவை எடுத்துள்ளார். ஆடுகளத்தின் தன்மையை நன்கு கணித்து அவர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
டாஸ் வென்ற பிறகு பேசிய அவர், எதிரணியை முதலில் பேட்டிங் செய்ய வைத்து அவர்கள் நிர்ணயிக்கும் இலக்கை துரத்தவே விரும்புவதாக தெரிவித்தார். மேலும், பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வருவதாகவும், ஆனால் சில நேரங்களில் 200 ரன்களை விட 220 ரன்கள் என்ற இலக்கை துரத்துவது தங்களுக்குச் சுதந்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவும் என்றும் மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார். லக்னோ அணியில் திக்வேஷ் ரதி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் மணிமாறன் சித்தார்த் சேர்க்கப்பட்டுள்ளார்.

மறுபுறம் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், இந்த சீசனில் தாங்கள் இதுவரை முதலில் பேட்டிங் செய்யவில்லை என்பதால் இது தங்களுக்கு ஒரு சிறந்த சவாலாக அமையும் என்றார். மேலும் வெற்றிப் பயணத்தை தொடரத் திட்டமிட்டுள்ளதால் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆடுகளம் எப்படி?
முல்லன்பூர் ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகச் சிறப்பாக ஒத்துழைக்கும் என ஆடுகள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பவுண்டரி எல்லைகள் 61 மீட்டர், 70 மீட்டர் மற்றும் நேராக 73 மீட்டர்களாக உள்ளன. ஆடுகளத்தில் சீரான அளவில் புற்கள் இருப்பதால், புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆரம்பத்தில் நல்ல ஸ்விங் கிடைக்கும். ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் பனிப்பொழிவு இருக்காது என மைதானப் பராமரிப்பாளர் உறுதி செய்துள்ளதால், இங்கு சுலபமாக 200 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும் என்பதால் இன்று ரன் மழை உறுதி.
விளையாடும் வீரர்கள் விவரம்:
பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கொனாலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஷஷாங்க் சிங், நேஹால் வதேரா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால்.
பஞ்சாப் கிங்ஸ் இம்பாக்ட் வீரர்கள்: விஜய்குமார் வைஷாக், ஹர்பிரீத் ப்ரார், சூர்யன்ஷ் ஷெட்ஜ், யாஷ் தாக்கூர், விஷ்ணு வினோத்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, முகுல் சவுத்ரி, முகமது ஷமி, ஆவேஷ் கான், பிரின்ஸ் யாதவ், மணிமாறன் சித்தார்த், மொஹ்சின் கான்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இம்பாக்ட் வீரர்கள்: அப்துல் சமத், திக்வேஷ் சிங் ரதி, மேத்யூ பிரீட்ஸ்கே, மயங்க் யாதவ், ஹிம்மத் சிங்


Click it and Unblock the Notifications