Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சிஎஸ்கே ஜாம்பவானை பயிற்சியாளராக நியமித்த குஜராத் டைட்டன்ஸ்.. சாய் சுதர்சன், கில் ஹாப்பி

சென்னை: ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆஸ்திரேலியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான மேத்யூ ஹெய்டன் புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஹெய்டன், 2008 முதல் 2010 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல்-லில் விளையாடினார்.

2009-ஆம் ஆண்டு ஆரஞ்சு தொப்பியை வென்ற பெருமைக்குரிய இவர், பல ஆண்டுகளாக ஐபிஎல் வர்ணனையாளராகப் பணியாற்றியுள்ளார். 2026-ஆம் ஆண்டு முதல், அவர் புதியதொரு பொறுப்பில் களமிறங்கவுள்ளார்.

தனது நியமனத்திற்குப் பிறகு பேசிய மேத்யூ ஹெய்டன், சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க வேண்டும். அதை தான் குஜராத் டைட்டன்ஸ் அணியில் நாங்கள் அமைக்க விரும்பும் தரம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் 2026 சீசனில், ஆஷிஷ் நெஹ்ராவின் பயிற்சி குழுவில் ஹெய்டன் இணையவுள்ளார். சுப்மன் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், கிளென் பிலிப்ஸ், ஜேசன் ஹோல்டர், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட பல முன்னணி வீரர்களுக்கு ஹைடனின் அனுபவம் நிச்சயம் கைக் கொடுக்கும்.

இது குறித்து பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநர் விக்ரம் சோலங்கி, "எங்கள் பயணத்தில் மேத்யூவின் நியமனம் ஒரு முக்கிய கட்டத்தில் வந்துள்ளது. சிறப்பம்சத்திற்கும், நீண்டகால வெற்றிக்கும் உறுதிபூண்ட ஒரு அணியாக, எங்கள் அணியின் அமைப்பை வலுப்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்," என்று அவர் தெரிவித்தார்.

"அவரது அனுபவம் அபாரமான மற்றும் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு வழிகாட்டும், வரும் சீசன்களில் எங்கள் பேட்டிங் அடையாளத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கை ஹெடன் மேற்கொள்வார். " என்றார். உலகக் கோப்பை சாம்பியனான ஹெட்ன், 15,000-க்கும் மேற்பட்ட சர்வதேச ரன்களைக் குவித்து, பல ஐசிசி போட்டி வெற்றிகளில் முக்கியப் பங்காற்றியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் ஹெடன், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ளார். 2026 சீசனுக்குப் பெரும் உற்சாகத்துடன் தயாராகி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு, ஹெய்டனின் வருகை மேலும் பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, March 11, 2026, 6:30 [IST]
Other articles published on Mar 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+