IPL 2026: சிஎஸ்கே spy யா இவரு? மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்று வரலாற்றில் மோசமான பவுலிங்
கவுஹாத்தி: ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு மோசமான பந்துவீச்சு சாதனையைப் பதிவு செய்தது. மழை காரணமாக மூன்று மணி நேர தாமதத்திற்குப் பின் தொடங்கிய ஆட்டத்தில், MI பந்துவீச்சாளர்கள் தொடக்கம் முதலே ரன்களை வாரி வழங்கினர்.
RR முதலில் பேட்டிங் தேர்வு செய்த 11 ஓவர் போட்டியில், தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், தீபக் சஹார் வீசிய முதல் ஓவரிலேயே அதிரடியாக 22 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் வரலாற்றில், எந்த ஒரு MI வீரர் வீசியதிலும் இதுவே மிக அதிக ரன்கள் வழங்கப்பட்ட முதல் ஓவர் என்ற சாதனையை படைத்தார்.

இதேபோன்று, 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக லூக் வுட் வீசிய முதல் ஓவரில் 19 ரன்கள் கொடுக்கப்பட்டது. அப்போது ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து வலுவான துவக்கத்தை அளித்திருந்தார். தற்போது சஹார் அந்த சாதனையை முறியடித்தார்.
சிஎஸ்கே அணியில் தொடர்ந்து பயணித்த தீபக் சாஹர், கடந்த சீசன் தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமானார். ஐபிஎல் 2025 சீசனில் மும்பை அணிக்காக தீபக் சாஹர் 14 போட்டிகளிர்ல 11 விக்கெட்டும், நடப்பு சீசனில் 2 போட்டியிர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, உலகத் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவை அச்சுறுத்தினார். பும்ராவின் முதல் பந்தையே சிக்ஸருக்கு பறக்கவிட்ட சூர்யவன்ஷி, அதே ஓவரில் மேலும் ஒரு சிக்ஸர் அடித்து பும்ராவை சிறிது நேரம் திகைக்க வைத்தார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் 77 ரன்களும், மற்றும் வைபவ் சூர்யவன்ஷி 14 பந்துகளில் 39 ரன்களும் குவித்தனர். இருவரின் அதிரடியால், ராஜஸ்தான் ராயல்ஸ் 11 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது. இவர்களின் வலுவான பேட்டிங் அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தியது.
இந்தத் தொடக்க ஜோடி வெறும் ஐந்து ஓவர்களில் 80 ரன்களைச் சேர்த்து, ஒன்பது சிக்ஸர்களை விளாசி, முதல் பந்திலிருந்தே எதிரணியை ஆதிக்கம் செலுத்தியது. ஜெய்ஸ்வால் முதல் ஓவரில் 22 ரன்கள் அடித்து வேகத்தை அமைக்க, சூர்யவன்ஷி பும்ராவிற்கு எதிராக அடுத்தடுத்து சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார்.
அல்லாஹ் கசன்ஃபர் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி ரன்வேகத்தை சற்று மட்டுப்படுத்தினாலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது ஆதிக்கத்தை தொடர்ந்தார். அவர் விரைவான அரைசதம் கடந்து, ராயல்ஸ் அணியின் வலிமையான இன்னிங்ஸை நிறைவு செய்தார்.


Click it and Unblock the Notifications