IPL 2026: திலக் வர்மாவிடம் கத்தி பேசியது என்ன? MI கேப்டன் ஹர்திக் ஓபன் டாக்.. "என் தலை சுற்றியது"
அகமதாபாத்: ஐபிஎல் 2026 சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் பெற்ற வெற்றியானது, தொடர் தோல்விகளுக்குப் பிறகு 'மிகவும் அவசியமானது' என கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார். ஐபிஎல் 2026 தொடரில் சந்தித்த நான்கு தொடர்ச்சியான தோல்விகளுக்கு MI இதன் மூலம் முடிவுகட்டியது.
இப்போட்டியில், ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஜோஸ் பட்லரை அவுட்டாக்கினார். திலக் வர்மாவுடன் இணைந்து 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு வலுசேர்த்தார். திலக் வர்மாவின் அதிரடி ஆட்டமே இந்த வெற்றியின் திருப்புமுனையாக அமைந்தது.

கதாநாயகன் திலக் வர்மா, 45 பந்துகளில் 101* ரன்களைக் குவித்து அசத்தினார். அவரது ஆட்டத்தால் MI கடைசி நான்கு ஓவர்களில் 73 ரன்களைக் குவிக்க, GT-க்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இது திலக்கின் முதல் ஐபிஎல் சதம் ஆகும். இதில் எட்டு பவுண்டரிகள், ஏழு சிக்ஸர்கள் அடங்கும்.
திலக் வர்மாவின் திறமையைப் பாராட்டிய ஹர்திக், "அவனிடம் அபாரத் திறமையுள்ளது, எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. பந்தைப் பார்த்து, எப்படி வந்தாலும் அடி என்றே அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவனது பேட்டிலிருந்து பந்து செல்லும் விதம் உண்மையிலேயே சிறப்பு," என்று குறிப்பிட்டார்.
"அவன் சிறப்பாக ஆட இதுவே சரியான நேரம். நான் சத்தமாகக் கத்தியபோது தலைசுற்றுவது போலவே இருந்தது. இந்த வெற்றி அணிக்கும், திலக்கிற்கும், MI-க்கும் மிகத் தேவையானது. ஒரு கேப்டனாக, நிலைமையை மாற்றுவதற்கு இந்த ஆற்றல் மிகவும் அவசியம்," என ஹர்திக் உணர்ச்சிவசப்பட்டுக் குறிப்பிட்டார்.
திலக்கின் அதிரடிக்குப் பின், பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ராவின் அதிரடி தொடங்கியது. 2022-க்குப் பின் ஐபிஎல்-ல் முதல் ஓவரை வீசிய பும்ரா, முதல் பந்திலேயே பி. சாய் சுதர்சனை வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார்.
பொதுவாக பும்ரா முதல் ஓவரை வீசுவது அரிது. அவரது 151 ஐபிஎல் போட்டிகளில் இது ஏழாவது முறை; 276 டி20 ஆட்டங்களில் 16-வது முறை. மும்பை அணி 'புதிய பந்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்த விரும்பியதாலேயே' அவரை முதல் ஓவரில் களமிறக்கியது.
பும்ரா முதல் ஓவர் வீசியது அரிதான நிகழ்வு குறித்து ஹர்திக் விளக்கினார். "ஜஸ்பிரித் ஏன் முதல் ஓவரை வீசுவதில்லை எனப் பலர் கேட்பதுண்டு. 138-வது ஐபிஎல் ஆட்டங்களில் வெறும் ஏழு முறைதான் அவர் முதல் ஓவரை வீசியுள்ளார். இது எனது பிரச்னை அல்ல. பும்ரா தனிச்சிறப்பு மிக்கவர். தேவைக்கேற்ப அவரைப் பயன்படுத்துவோம், பொதுவாக தொடக்கத்தில் அல்ல. இருப்பினும், இப்போட்டியில் புதிய பந்தில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினோம், அதற்கு அவரை விட சிறந்தவர் யாருமில்லை என உணர்ந்து இன்று பயன்படுத்தினோம்," என்றார்.
அகமதாபாத்தில் GT-க்கு எதிராக 0-4 என்ற மோசமான தோல்விச் சாதனையுடன் MI அணி களமிறங்கியது. இந்த நிலையை மாற்றி, 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிடைத்த நேரமும், இடமும் இந்த வெற்றியை "சிறப்பு மிக்கதாக" மாற்றியது.
"எதிரணியின் சொந்த மண்ணில் போய் வெல்வது கடினம். MI அணிக்கு அகமதாபாத் மைதானத்தில் ஆடுவது சவால் நிறைந்தது. இன்று அருமையாக விளையாடினோம், இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இது அணிக்கு மிக அவசியமானதாக இருந்தது," என ஹர்திக் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications