Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: "என் பக்கத்துல கூட யாரும் வர முடியாது" .. புள்ளிவிவரங்களை காட்டி எகிறிய முகமது ஷமி

லக்னோ: இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தான் ஒரு டி20 பந்துவீச்சாளர் அல்ல என்ற விமர்சனங்களுக்குத் தனது பாணியில் அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் எந்த ஒரு இந்தியப் பந்துவீச்சாளரும் தனது சாதனைகளுக்கு அருகில் கூட வரவில்லை என்று அவர் ஆவேசமாகத் பேசி இருக்கிறார்.

சமீபகாலமாக இந்திய டி20 அணியில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா போன்ற வேகப் பந்துவீச்சாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2026 டி20 உலகக்கோப்பையிலும் ஷமிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இது குறித்து இணையதள நேர்காணல் ஒன்றில் பேசிய ஷமி, "யாரும் புள்ளிவிவரங்களை எண்ண வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். உங்களிடம் திறமை இருந்தால், ஏன் எண்களை வைத்து மதிப்பிட வேண்டும்? மைதானத்தில் உங்களது அணிக்குச் சிறப்பாகச் செயல்பட்டால் நீங்கள் யாருக்கும் குறைந்தவர் கிடையாது" என்றார்.

IPL 2026 Mohammed Shami Defends T20 Credentials Claims No Indian Bowler Matches His IPL Stats

தொடர்ந்து பேசிய அவர், "ஐபிஎல் சாதனைகளை எடுத்துப் பாருங்கள். கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளில் ஏதேனும் ஒரு இந்தியப் பந்துவீச்சாளர் எனது சாதனைகளுக்கு நெருக்கமாக இருக்கிறாரா என்று பாருங்கள். அப்படியிருந்தும் நான் ஒரு டி20 பந்துவீச்சாளர் இல்லை என்று சொல்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நான் 130 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். இதற்கு மேல் என்ன வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.

சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷமி அசத்தினார். இருந்தும் அவருக்குத் தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்குப் 'பிஆர்' எனப்படும் மக்கள் தொடர்பு நிறுவனங்களின் வேலைகள் காரணமா என்ற கேள்விக்கு, "இருக்கலாம், பிஆர் நிறுவனங்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால் அதிர்ஷ்டத்தை யாராலும் மாற்ற முடியாது. என்னைத் தற்காலிகமாகத் தடுக்கலாம், ஆனால் எனது திறமையை அல்ல" என்று கூறினார்.

2026 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பந்துவீச்சை முகமது ஷமி முன்னின்று வழிநடத்த உள்ளார். 2020 முதல் 2025 வரையிலான ஐபிஎல் புள்ளிவிவரப்படி ஹர்ஷல் படேல், பும்ரா போன்றவர்களுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் ஷமியும் ஒருவர். ஆனாலும், அவருக்கு தொடர்ந்து இந்திய டி20 அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முகமது ஷமியின் இந்தப் பேச்சு கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

Story first published: Tuesday, March 31, 2026, 21:26 [IST]
Other articles published on Mar 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+