Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: முகமது ஷமி இந்திய அணிக்குள் வர இன்னும் என்ன செய்யனும்? ஆகாஷ் சோப்ரா சரமாரி கேள்வி

மும்பை: இந்திய அணியின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, அண்மை காலமாக சிறப்பாக விளையாடியும் உரிய அங்கீகாரம் கிடைக்காதது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக அவர் வீசிய பந்துவீச்சு, விமர்சகர்கள் மற்றும் பல கிரிக்கெட் ரசிகர்களிடையேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.36 வயதான ஷமி, அந்த முக்கியமான போட்டியில் நான்கு ஓவர்களில் வெறும் 9 ரன்கள் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதில், 18 டாட் பால்களும் பந்துகளும் அடங்கும். அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி, அணிக்கு வலுவான தொடக்கத்தை கொடுத்தார். 2025 சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு தேசிய அணியில் இடம்பெறாத ஷமி, 2025-26 சீசனில் பெங்கால் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

ஷமியின் ஆட்டம் குறித்து பேசிய சோப்ரா, "முகமது ஷமிக்கு நாம் போதுமான பெருமை கொடுக்கிறோமா, எப்போது அவருக்கு உண்மையாகவே பெருமை கொடுப்போம்? இது ஒரு பெரிய கேள்வி. நாம் ஏன் அவரை கொண்டாட மறுக்கிறோம்?" என்று தனது யூடியூப் சேனலில் நேரடியாகவே கேள்வி எழுப்பினார்.

"ஐபிஎல்-லில் அவர் இப்படி சிறப்பாக ஆடினால், அனைவரும் எழுந்து நின்று கவனிக்க வேண்டும் என்று நான் சொல்லியிருந்தேன். அப்போது எதிரணியின் தரம் சரியில்லை என்று யாராலும் சொல்ல முடியாது, ஏனெனில் இது உலகிலேயே மிகவும் போட்டி நிறைந்த லீக்" என்றார் அவர்.

Mohammed shami

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக, , ஷமி நான்கு ஓவர்கள் வீசி வெறும் ஒன்பது ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்; இதில் 18 டாட் பந்துகளும் அடங்கும் என்பதை சோப்ரா சுட்டிக்காட்டினார். 450-க்கும் மேற்பட்ட சர்வதேச விக்கெட்டுகளையும், த அனுபவத்தையும் கொண்டுள்ள ஷமி, இந்திய அணிக்குத் திரும்புவதற்கு கடுமையாக போராடி வருகிறார்.

Story first published: Wednesday, April 8, 2026, 14:55 [IST]
Other articles published on Apr 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+