Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: பிக் பாஸ் பிரபலத்தை காதலிக்கிறாரா முகமது சிராஜ்.. காபி ஷாப்பில் டேட்டிங்

அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் முகமது சிராஜ், பாலிவுட் நடிகை மஹிரா ஷர்மா இருவரும் ஒரே காபி ஷாப்பில் காணப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் இருவரும் இருவரும் காதலிக்கிறார்களா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஒரே நேரத்தில் அங்கு இருந்தார்களே தவிர, ஒன்றாகப் பார்க்கப்படவில்லை என்றாலும், இவர்களின் சந்திப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களும், காணொலிகளும் சமூக ஊடகங்களில் பரவின. 'தீரன் 2' பார்த்துவிட்டு அணி ஹோட்டலுக்குத் திரும்பும் சிராஜ் - மஹிரா ஜோடி' போன்ற பதிவுகள் இணையத்தளத்தில் வலம் வருகின்றன. நீண்ட காலமாகப் பேசப்பட்டு வந்த காதல் வதந்திகளுக்கு புத்துயிர் அளித்தன.

இந்தக் காதல் வதந்திகளை முகமது சிராஜோ அல்லது மஹிரா ஷர்மாவோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இருவரும் மௌனம் காப்பதால் ரசிகர்கள் பல்வேறு யூகங்களைச் செய்கிறார்கள். சிராஜ்-மஹிரா பற்றிய வதந்திகள் இது முதல் முறையல்ல. கடந்தகால ஆன்லைன் உரையாடல்கள், டேட்டிங்கள் ஏற்கெனவே யூகங்களுக்கு வழிவகுத்தன.

'பிக் பாஸ் 13' மூலம் பிரபலமான மஹிரா ஷர்மா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை வீடியோக்கள், பிராண்ட் விளம்பரங்கள் வாயிலாக பொழுதுபோக்குத் துறையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவில் பிரபல கிரிக்கெட் வீரர்கள், நடிகைகளின் உறவுகள் பொதுமக்களிடையே எப்போதும் ஆர்வம் தூண்டும் என்பதால், சிராஜ் - மஹிரா ஜோடியும் இதற்கு விதிவிலக்கல்ல.

சுவாரஸ்யமாக, மஹிரா ஷர்மாவும் முகமது சிராஜும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடரவில்லை. வதந்திகள் உறுதி செய்யப்படாவிட்டாலும், இவர்களைப் பற்றிய ஆர்வம் கூடிக்கொண்டே இருக்கிறது. இது தற்செயலா அல்லது வேறேதேனுமா என ரசிகர்கள் ஒவ்வொரு விசயத்தை உற்றுநோக்குகின்றனர்.

இதற்கிடையில், IPL 2026 தொடரின் முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்ளும்போது முகமது சிராஜ் களமிறங்குவார். கடந்த ஆண்டு IPL தொடரில், அவர் 15 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், பந்துவீச்சு சிக்கன விகிதம் 9.24 ஆக இருந்தது.

Story first published: Tuesday, March 31, 2026, 16:40 [IST]
Other articles published on Mar 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+