Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: காயத்திலிருந்து குணமடைந்து விட்டாரா தோனி? பயிற்சியில் அடித்த மிரட்டல் சிக்சர்.. இன்று பங்கேற்பாரா?

சென்னை: ஐபிஎல் 2026 சீசனில் சிஎஸ்கே அணியின் மூத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாடவில்லை. இந்த சூழலில் தற்போது அவர் காயத்திலிருந்து குணமடைந்து வரும் நிலையில், வலைப்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். கவுவாஹாத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக CSK சந்தித்த தோல்வியில் அவர் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நேரத்தில், தோனி அணியுடன் பயணத்தில் செல்லவில்லை. அதற்குப் பதிலாக, தனது காயம் குணமடைவதற்கான பணிகளைத் தொடர சென்னையில் தங்கியிருந்தார். ஏப்ரல் 3, வெள்ளிக்கிழமை பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு எதிரான CSK-வின் முதல் ஹோம் ஆட்டத்தில் அவர் களமிறங்க வாய்ப்பில்லை என்றாலும், வலைப்பயிற்சியின் முடிவில் பங்கேற்றார். அப்போது அவர் துடிப்பான ஃபார்மில்தான் காணப்பட்டார்.

தோனி தனது வலைப்பயிற்சியில் பந்துகளை துல்லியமாக விளாசியதை பார்த்து அங்கிருந்தவர்கள் துள்ளி குதித்தனர். ஒரு சக்திவாய்ந்த புல் ஷாட், பந்தை பார்க்காமல் அடித்த ஒரு சிக்ஸ், மற்றும் பேக் ஃபுட்டில் நிலைத்து நின்று பந்துவீச்சாளரின் தலைக்கு மேல் அடித்த ஒரு ஷாட் என அவரது ஸ்டைலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் தோனியின் காயம் மற்றும் அவரது குணமடைவது குறித்து கேட்கப்பட்டது. "14 நாட்கள் குணமடைய பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், 13வது நாள் முடிந்த பிறகுதான் என்னால் முழுமையாக பதிலளிக்க முடியும்" என்று தோனியின் முன்னேற்றம் குறித்து கெய்க்வாட் விளக்கம் அளித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்த சில நாட்கள் மிகவும் பரபரப்பானதாக இருக்கப் போகிறது. ஏப்ரல் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் ஹோம் ஆட்டத்தில் விளையாடுகிறது. அதை தொடர்ந்து, ஏப்ரல் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும் களமிறங்க உள்ளது. இது அணிக்கு கடுமையான சவாலாக அமையும்.

Story first published: Friday, April 3, 2026, 11:58 [IST]
Other articles published on Apr 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+