Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs DC போட்டியில் தோனி விளையாடுவாரா? சிஎஸ்கே ரசிகர்களுக்கு பேட் நியூஸ்.. காயம் குறித்த அப்டேட்

சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளால் வெற்றி கணக்கை தொடங்க முடியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தவித்து வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 11ல் நடக்கவுள்ள டில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் முன்னாள் கேப்டன் தோனி விளையாடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது சிஎஸ்கே அணியின் ரசிகர்களை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது 44 வயதாகும் தோனிக்கு காலில் தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சென்னை அணியின் பிசியோதெரபிஸ்ட் மற்றும் மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தனது குடும்பத்தினருடன் சென்னையில் தங்கியுள்ள அவர், 3 நாட்களுக்கு முன் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். இருப்பினும் அவர் இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை. அவர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து மீண்டும் போட்டிக்கு திரும்ப மேலும் ஒரு வாரம் வரை ஆகலாம் என அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

IPL 2026 MS Dhoni Likely to Miss CSK vs Delhi Capitals match Amid Chennai Super Kings Losing Streak

காயம் காரணமாக கவுஹாத்தியில் மார்ச் 30ல் நடந்த போட்டியிலும், பெங்களூருவில் ஏப்ரல் 5ல் நடந்த போட்டியிலும் பங்கேற்க தோனி பயணிக்கவில்லை. சொந்த மண்ணில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் அவர் களமிறங்கவில்லை. தோனி இல்லாத குறையை சென்னை அணி ஒவ்வொரு போட்டியிலும் சந்தித்து வருகிறது.

அடுத்ததாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 11ல் டில்லி அணியையும், ஏப்ரல் 14ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும் சென்னை எதிர்கொள்கிறது. இதில் டில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியிலும் அவர் பங்கேற்பது இன்னும் முடிவாகவில்லை. அவரது உடல்நிலை முன்னேற்றத்தை பொறுத்தே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த சீசனில் இதுவரை ஒரு புள்ளி கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ளது. கடந்த 2022 சீசனில் முதல் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவியதே அந்த அணியின் மிக மோசமான தொடக்கமாக இருந்தது. அதன்பிறகு நடப்பு சீசனில் தான் சென்னை அணி மீண்டும் ஒரு மோசமான தொடக்கத்தை பதிவு செய்துள்ளது. அனுபவ வீரரான தோனி மீண்டும் அணிக்கு திரும்பினால் மட்டுமே, சென்னை அணி பழையபடி வெற்றிப் பாதைக்கு திரும்பும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Story first published: Wednesday, April 8, 2026, 14:20 [IST]
Other articles published on Apr 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+