Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: தோனி நாளைய போட்டியிலும் பங்கேற்க மாட்டார்.. எப்போது தான் சிஎஸ்கே-க்கு திரும்புவார்

சென்னை: இந்திய கிரிக்கெட் உலகில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேள்விக்கு இப்போது இறுதியாக விடை கிடைத்துள்ளது. சென்னை சூப்பர்கிங்ஸ் ரசிகர்களுக்கு இது இனிப்பும், கசப்பும் கலந்த செய்தியாகவே அமைந்துள்ளது. வரும் ஏப்ரல் 14 அன்று சேப்பாக்கம் மைதானத்தில் MS தோனியின் அதிரடி ஆட்டத்தைக் காண ஆவலுடன் காத்திருந்தோர் ஏமாற்றமடையக்கூடும்.

ஐபிஎல் 2026 சீசன் தொடங்கும் முன்பே காயத்தால் அவதிப்படும் 44 வயது தோனி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது, புள்ளிப்பட்டியலில் தடுமாறும் ஐந்து முறை சாம்பியன் CSK, விக்கெட் கீப்பிங்கிற்கு சஞ்சு சாம்சனை நம்பியுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே மருத்துவக் குழு தோனியை அவசரப்படுத்தி களமிறக்க விரும்பாததால், அவர் ஏப்ரல் 14 அன்று எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வெறும் டகவுட்டிலேயே இருப்பார். தனது உடல் தகுதியை மீட்கும் பயிற்சிகளையும் , தீவிர வலைப்பயிற்சிகளையும் அவர் அங்கிருந்து தொடர்வார்.

ஆனால், ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியும் ஒன்றுள்ளது! CSK நிர்வாகத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் அளிக்கும் தகவலின்படி, ஏப்ரல் 19 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோனி மீண்டும் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. ஆனாலும், அவர் 20 ஓவர்களும் விக்கெட்டின் பின்னால் இருக்க மாட்டார் என்றும், 'இம்பாக்ட் பிளேயராகவே’ தனது பங்களிப்பை அளிப்பார். என்றும் தெரிகிறது-

இம்பேக்ட் பிளேயராக இதுவரை தோனி களமிறங்கியது இல்லை. 44 வயதாக இருந்தாலும், விக்கெட் கீப்பிங் பேட்டிங் என தொடர்ந்து தனது பங்கை தோனி செய்து வந்தார். தற்போது தோனி இம்பேக்ட் பிளேயர் விதி மூலம் களமிறங்கலாம். இதனால் கேகேஆர் அணிக்கு எதிராக வரும் ஏப்ரல 19ஆம் தேதி தோனியை நாம் காண கூடும்.

தோனி இம்பேக்ட் பிளேயராக களம் இறங்கினால், சிஎஸ்கே அணி தங்களது யுத்திகளை மாற்ற வேண்டி இருக்கும். இதே போன்று தோனி 45 வயதை நெருங்குவதால், இனி, அவர் அடுத்த ஐபிஎல் சீசன்களில் விளையாடுவது என்பது கிட்டதட்ட முடியாத காரியமாக மாறி விடுகிறது.

Story first published: Monday, April 13, 2026, 18:18 [IST]
Other articles published on Apr 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+