Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: 5 மணி நேரம் ஜிம், நீச்சல் பயிற்சி.. பழைய தோனியை பார்க்க ரெடியா.. சிஎஸ்கேக்கு Last dance

சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் தோனி தன்னுடைய 44-வது வயதில் விளையாட உள்ளார். சிஎஸ்கே அணிக்காக ஐந்து கோப்பையை வென்று கொடுத்த தோனி வயதாகி வரும் நிலையில் அடுத்த சீசனில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 2023 ஆம் ஆண்டு தோனி தலைமையில் சி எஸ் கே அணி கோப்பையை வென்றது. அடுத்த இரண்டு சீசனிலும் சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் தடுமாறியது. இது தோனிக்கு மிகப்பெரிய மன கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

MS Dhoni

இதனால் கோப்பையுடன் திரும்ப வேண்டும் என்று எதிர்பார்க்கும் தோனி கடைசியாக ஒரு முறை சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என முடிவு எடுத்திருக்கிறார். ஆனால் தோனிக்கு காலில் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக அறுவை சிகிச்சை எல்லாம் தோனி மேற்கொண்டாலும், அவரால் பழைய மாதிரி முழு நேரமும் களத்தில் செலவிட முடியவில்லை.

அதனால் தோனி பேட்டிங் செய்ய வரும்போது குறைந்த பந்துகள் மட்டும் இருந்தால் அதை எதிர்கொள்ள கீழ் வரிசையில் விளையாடுகிறார். 2024 ஆம் ஆண்டு சீசனில் 73 பந்துகளை மட்டுமே தோனி எதிர் கொண்டார். இதே போன்று 2025 ஆம் ஆண்டு சீசனில் தோனி 145 பந்துகள் எதிர்கொண்டார். இதற்கு காரணம் சிஎஸ்கே அணியில் டாப் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் சில போட்டிகளில் தோனி முன்பே பேட்டிங் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இந்த நிலையில் கடைசி சீசனில் தன்னுடைய பழைய உடல் தகுதியை மீட்டு முழு நேரமும் களத்தில் செலவிட தோனி முடிவெடுத்துள்ளார். அதற்காக தற்போது தோனி விசேஷ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். 44 வயதான தோனி என்னென்ன பயிற்சி மேற்கொள்கிறார் என்பதை தற்போது பார்க்கலாம்.

ஒவ்வொரு நாளும் தோனி ஜிம்மில் 5 மணி நேரம் பயிற்சி செய்வதாக கூறப்படுகிறது. அதன் பிறகு பெரிய சிக்சர்களை அடிக்கும் வகையில் தோனி வலை பயிற்சியில் பெரிய ஷாட் ஆட முயற்சி செய்து வருகிறார். தமக்கு பழைய மாதிரி பந்துகளை அடிப்பதற்கு சக்தி இருக்கிறதா என்பதை முயற்சி செய்து பார்த்த தோனி, அதனை எப்படி மேம்படுத்துவது பவுலர்கள் யாக்கர்களை வீசினால் அதை எப்படி சமாளிப்பது என்பது போன்ற பயிற்சியை தோனி மேற்கொண்டுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் போட்டியில் இருக்கும் சூழல் போல் இத்தனை பந்துக்கு இத்தனை ரன்கள் அடிக்க வேண்டும், பில்டர்கள் இந்த இடத்தில் எல்லாம் இருப்பார்கள் என்பதை கணக்கிட்டு மேட்ச் ஸ்டமுலேஷன் என்ற முறையில் தோனி பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இதை தவிர களத்தில் 40 ஓவரும் நிற்கும் வகையில் இரண்டு மாதம் நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதால் நீச்சல் பயிற்சியிலும் தோனி எடுத்து வருகிறார். இதன் மூலம் பழைய தோனியை ரசிகர்கள் ஒரு முறை பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, November 13, 2025, 18:46 [IST]
Other articles published on Nov 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+