Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார்.. ஆனால்.... ட்விஸ்ட் வைத்த சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன்

மும்பை: வரும் ஐபிஎல் 2026 சீசனின் அனைத்துப் போட்டிகளிலும் தோனி பங்கேற்பார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ( அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், களத்தில் தோனி பேட்டிங் அல்லது விக்கெட் கீப்பிங் ஆகியவை பணி மேற்கொள்வாரா என்பது குறித்து அணி நிர்வாகமே இறுதி முடிவு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 19வது சீசன் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ளது. அனைத்து அணிகளும் ஏற்கனவே தங்கள் பயிற்சி முகாம்களைத் தொடங்கிவிட்டன. சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கோப்பையில் விளையாடிய வீரர்கள் விரைவில் தங்கள் அணிகளுடன் இணைந்து, வரவிருக்கும் தொடருக்கான பயிற்சியைத் தொடங்குவார்கள்.

சிஎஸ்கே அணிக்கு 'தோனி களமிறங்குவதால், அவரது வயதின் காரணமாக அனைத்துப் போட்டிகளிலும் விளையாட முடியுமா என்ற கவலைகள் எழுந்தன. இந்தக் கவலைகளைப் போக்கும் வகையில், காசி விஸ்வநாதன் உறுதியுடன், "என் விருப்பப்படி, அவர் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவார்," என்று தெரிவித்தார்.

சஞ்சு சாம்சன் போன்ற விக்கெட் கீப்பர்-பேட்டர் அணியில் உள்ள நிலையில், தோனியின் ரோல் பற்றி கேட்டபோது, பதில் அளித்த காசி, "அதை என்னால் சொல்ல முடியாது. அது கிரிக்கெட் அணி நிர்வாகத்தால் எடுக்கப்படும் கிரிக்கெட் முடிவு. நிர்வாக ஊழியர்களால் அல்ல. எனவே, அவர் ஒரு பேட்ஸ்மேனாக அல்லது ஒரு விக்கெட் கீப்பர்-பேட்டராக அல்லது ஒரு இம்பாக்ட் பிளேயராக விளையாடுவாரா என்பதை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள்," என்று பதிலளித்தார்.

நாட்டில் வரவிருக்கும் தேர்தல் கருத்தில் கொண்டு, ஐபிஎல் 2026 தொடருக்கான அட்டவணை இன்றோ அல்லது நாளையோ அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே, தனது அனைத்து உள்நாட்டுப் போட்டிகளையும் சென்னையில் மட்டுமே விளையாடும் என்று காசி உறுதிப்படுத்தினார். "நாங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே, பிசிசிஐ அட்டவணையை அறிவிப்பதற்காகக் காத்திருக்கிறோம்," என்று தெரிவித்தார்.

"இந்தியா உலகக் கோப்பையை வென்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி, அதிலும் அவர்கள் தொடர்ச்சியாக வென்றது சிறப்பு. சிஎஸ்கே வீரர்கள் சஞ்சு மற்றும் சிவம் தூபே இருவரும் சிறப்பாகச் செயல்பட்டதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது சிஎஸ்கே அணிக்கு இங்கே சிறப்பாகச் செயல்பட அதிக நம்பிக்கையை அளிக்கிறது, சிஎஸ்கே பயிற்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது, இதுவரை எந்தப் பிரச்சனையும் இல்லை. வீரர்கள் உற்சாகமாகப் பயிற்சி செய்து வருகின்றனர்," என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

Story first published: Wednesday, March 11, 2026, 16:43 [IST]
Other articles published on Mar 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+