IPL 2026: நூர் அகமது கம்பேக்கிற்கு காரணம் தோனி தான்.. சிஎஸ்கே பயிற்சியாளர் பரத் கருத்து
மும்பை: ஐபிஎல் 2026 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சென்னை ஆடுகளத்தில், நூர் தனது மாயாஜால பந்துவீச்சால் சென்னைக்கு வெற்றியை உறுதி செய்தார்.நூர் அஹ்மத், தனது நான்கு ஓவர்களில் வெறும் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
193 ரன்கள் என்ற சவாலான இலக்கை துரத்திய கொல்கத்தா அணி, இவரது அபார பந்துவீச்சால் நடு ஓவர்களில் தடுமாறி, எளிதான தோல்வியைச் சந்தித்தது. இப்போட்டியில் நூரின் பந்துவீச்சு, கொல்கத்தாவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்த தொடரில் முதல் 4 போட்டியில் நூர் அகமது வெறும் 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.

இந்த அசூர வெற்றிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் ஆலோசனை முக்கியக் காரணம் என உதவி பந்துவீச்சு பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் வெளிப்படுத்தினார். "வலைப்பயிற்சியின் போது நூர் அஹ்மத், தோனியுடன் நீண்ட நேரம் உரையாடினார். அப்போது தோனி, தனது லெக்-பிரேக் பந்துவீச்சை சிறப்பாக வீசும்படி அறிவுறுத்தினார். அது நூருக்கு மிகவும் உதவியது" என்று ஸ்ரீராம் குறிப்பிட்டார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நூரின் சுழலில் சிக்கி சீர்குலைந்தது. 79 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்து, முன்னணி பேட்ஸ்மேன்களான அஜிங்க்யா ரஹானே, ரிங்கு சிங் 6 ரன்கள், மற்றும் கேமரூன் கிரீன் 0 ரன்கள் ஆகியோரை அடுத்தடுத்து இழந்தது. இதனால், 90 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என கொல்கத்தா அணி, பெரும் சரிவைச் சந்தித்தது.
போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஸ்ரீராம், "ஆடுகளம் இன்று பந்துவீச்சுக்கு மிகவும் உதவியது. நூருக்கு நல்ல சுழல் கிடைத்தது. இது பந்தின் வேகத்தைக் குறைத்ததால் மாற்றத்தையும் ஏற்படுத்தியது" என்றார். இந்த நுணுக்கங்களில் நூர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
தோனியுடனான உரையாடலில், குறிப்பாக லெக்-பிரேக் பந்துவீச்சை எவ்வாறு சிறப்பாக வீசுவது என்பது குறித்து நூர் அதிகம் கற்றுக்கொண்டார். "அது இன்று மிக உதவியாக இருந்தது, அதன் சிறப்பான பலன்கள் களத்தில் கண்கூடாகத் தெரிந்தன" என்று ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். எந்த ஆடுகளமாக இருந்தாலும், ஆக்ரோஷமாக சுழல் பந்துவீசுவதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சிஎஸ்கே அணிக்கு தற்போது வெற்றிக்கான பார்முலாவையும், பிளேயிங் லெவனையும் கண்டுபிடித்து இருக்கிறது. சிஎஸ்கே அணி அடுத்ததாக வரும் சனிக்கிழமை ஐதராபாத்தில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.


Click it and Unblock the Notifications