Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB vs SRH: வெற்றிகரமாக 2026 ஐபிஎல் தொடரை துவங்கிய ஆர்சிபி.. டாஸ் நிகழ்வே சக்ஸஸ்!

பெங்களூர்: 2026 ஐபிஎல் தொடர் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். கடந்த ஆண்டு கோப்பை வென்ற ஆர்சிபி அணி இந்த ஆண்டு டாஸ் வென்று தொடரை வெற்றிகரமாக துவக்கி இருக்கிறது.

டாஸ் வென்ற பிறகு பேசிய ரஜத், "நாங்கள் முதலில் பந்துவீசப் போகிறோம். கடந்த ஆண்டின் வெற்றிகள் எங்களுக்குப் பெரிய நம்பிக்கையை அளித்துள்ளன. இந்த சீசனில் நாங்கள் கோப்பையைத் தக்கவைக்கக் களமிறங்கவில்லை, மாறாக மீண்டும் ஒருமுறை சாம்பியனாக வேண்டும் என்ற முனைப்பில் விளையாடப் போகிறோம். அணியில் உள்ள அனைத்து வீரர்களும் முழு உடல் தகுதியுடன் உள்ளனர். ஆர்சிபி ஜெர்சியில் இரண்டாவது நட்சத்திரத்தைப் பதிக்க நாங்கள் எங்களால் முடிந்தவரைப் போராடுவோம்" என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.

IPL 2026 Opener Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad Toss Update and Match Details

ஆர்சிபி அணியில் இன்றைய போட்டியில் ஜேக்கப் டஃபி மற்றும் அபிநந்தன் சிங் ஆகிய இரு புதிய வீரர்கள் அறிமுகமாகின்றனர். பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் மற்றும் குர்னால் பாண்டியா ஆகியோர் அனுபவம் சேர்க்கின்றனர்.

மறுபுறம், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை இளம் வீரர் இஷான் கிஷன் வழிநடத்துகிறார். 27 வயதாகும் இஷான் கிஷன், ஐதராபாத் அணியின் வரலாற்றில் கேன் வில்லியம்சனுக்கு அடுத்தபடியாக மிக இளம் வயதில் அணியை வழிநடத்தும் இரண்டாவது கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். டாஸ் நிகழ்வின் போது பேசிய இஷான் கிஷன், "ஆடுகளம் மிகவும் புதிதாகத் தெரிகிறது. முதலில் பேட்டிங் செய்கிறோமா அல்லது பந்துவீசுகிறோமா என்பது முக்கியமல்ல, எங்களுடைய திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்த வேண்டும். வீரர்கள் அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர்" என்று கூறினார்.

ஐதராபாத் அணியில் அதிரடி தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்குகின்றனர். ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி தொடக்கப் போட்டியில் விளையாடுவது இது 7-வது முறையாகும். மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிறைந்து காணப்படுவதால், இன்றைய போட்டி ஒரு ரன் மழையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்சிபி பிளேயிங் 11: விராட் கோலி, பில் சால்ட், ரஜத் படிதார், ஜித்தேஷ் சர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், அபிநந்தன் சிங், ஜேக்கப் டஃபி, சுயாஷ் சர்மா.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் பிளேயிங் 11: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், அனிகேட் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சலில் அரோரா, ஹர்ஷ் துபே, ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட், ஈஷன் மலிங்கா.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இம்பாக்ட் வீரர்கள்: தேவ்தத் பாடிக்கல், ஜேக்கப் பெத்தேல், ரசிக் சலாம் தார், கனிஷ்க் சௌஹான், வெங்கடேஷ் ஐயர்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இம்பாக்ட் வீரர்கள்: ஷிவாங் குமார், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் பெய்ன், ஸ்மரன் ரவிச்சந்திரன், சாகிப் ஹுசைன்

Story first published: Saturday, March 28, 2026, 19:04 [IST]
Other articles published on Mar 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+