Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆரஞ்சு தொப்பி.. 3ஆம் இடத்தில் ரோஹித்.. முதல் இடத்தில் யார்? ஊதா பட்டியலில் தாக்குர் அதிரடி!

மும்பை: 2026 ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை வீரர்களின் அதிரடி ஆட்டம், ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பி பட்டியல்களில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஆரஞ்சு தொப்பி பட்டியல்

பேட்ஸ்மேன்களுக்கான ஆரஞ்சு தொப்பி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரையன் ரிகெல்டன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 43 பந்துகளில் 81 ரன்கள் விளாசியதன் மூலம் அவர் இந்தப் பெருமையைப் பெற்றார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் இஷான் கிஷன் 80 ரன்களுடன் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

மும்பை அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா 78 ரன்கள் குவித்து இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக விராட் கோலி (69 ரன்கள்), அஜின்கியா ரஹானே (67 ரன்கள்) மற்றும் தேவ்தத் படிக்கல் (61 ரன்கள்) ஆகியோர் முறையே 4, 5 மற்றும் 6 ஆகிய இடங்களில் உள்ளனர். அங்க்ரிஷ் ரகுவன்ஷி (51 ரன்கள்) 7-வது இடத்திலும், அனிக்கேட் வர்மா (43 ரன்கள்) 8-வது இடத்திலும் உள்ளனர்.

IPL 2026 Orange and Purple Cap Update after MI vs KKR match Ryan Rickelton and Jacob Duffy Leads

ஊதா தொப்பி பட்டியல்

பந்துவீச்சாளர்களுக்கான ஊதா தொப்பி பட்டியலில் ஆர்சிபி அணியின் ஜேக்கப் டஃபி 3 விக்கெட்டுகளை (3/22) வீழ்த்தி முதலிடத்தில் நீடிக்கிறார். கொல்கத்தா அணிக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை (3/39) சாய்த்த மும்பை அணியின் ஷர்துல் தாகூர் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆர்சிபி அணியின் ரொமாரியோ ஷெப்பர்ட் 3 விக்கெட்டுகளுடன் (3/54) மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ஐதராபாத் அணியின் டேவிட் பெயின் 2 விக்கெட்டுகளுடன் 4-வது இடத்தில் உள்ளார். புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, ஜெய்தேவ் உனத்கட், சுனில் நரைன், கார்த்திக் தியாகி மற்றும் ஹர்ஷ் துபே ஆகியோர் தலா 1 விக்கெட்டுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ஷர்துல் தாகூர் ஆட்டநாயகன் விருதை வென்றார். அவர் தனது முதல் ஓவரிலேயே ஃபின் ஆலன் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அதன் பிறகு 25.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட கேமரூன் கிரீன் மற்றும் அதிரடியாக விளையாடிய அஜின்கியா ரஹானே ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஐபிஎல் 2026 தொடரின் தொடக்கத்திலேயே இந்த இரண்டு பட்டியல்களிலும் கடும் போட்டி நிலவி வருவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Monday, March 30, 2026, 8:12 [IST]
Other articles published on Mar 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+