Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: கோலி, ராகுல், வைபவ், அபிஷேக்.. ஒரே நாளில் 4 முறை கைமாறிய ஆரஞ்சு தொப்பி.. யாரிடம் உள்ளது?

டெல்லி: 2026 ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவிக்கும் வீரருக்கு வழங்கப்படும் 'ஆரஞ்சு தொப்பி' ஒரே நாளில் 4 முன்னணி வீரர்களிடையே மாறி மாறி சென்றது. விராட் கோலியின் தலையில் இருந்த இந்த தொப்பி, அடுத்த சில மணி நேரங்களிலேயே கேஎல் ராகுல், வைபவ் சூர்யவன்ஷி என அடுத்தடுத்து கைமாறி, தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா வசம் தஞ்சம் புகுந்துள்ளது. ஒரு நாளுக்குள் நடந்த இந்த அதிரடி மாற்றங்கள் ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் சுவாரஸ்யத்தை கிளப்பியுள்ளது.

நேற்று முன்தினம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 81 ரன்கள் விளாசிய ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, மொத்தம் 328 ரன்களுடன் ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்திருந்தார். ஆனால் சனிக்கிழமை மதியம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 152 ரன்கள் குவித்து ருத்ரதாண்டவம் ஆடினார். இதன் மூலம் அவரது மொத்த ரன்கள் 357 ஆக உயர்ந்ததால், கோலியை அதிரடியாக பின்னுக்கு தள்ளி ராகுல் முதலிடத்திற்கு முன்னேறினார்.

IPL 2026 Orange Cap Swaps Hands 4 Times in One Day Abhishek Sharma Emerges as Leader

ஆனால், ராகுலின் இந்த மகிழ்ச்சி சில மணி நேரங்கள் கூட நீடிக்கவில்லை. அதே நாள் இரவு ஜெய்ப்பூரில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 36 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார். அந்த ஆட்டத்தில் 103 ரன்கள் குவித்த வைபவ், மொத்தமாக 357 ரன்களை எட்டி ராகுலின் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார். இருப்பினும், அதே ஆட்டத்தில் சேஸிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி எல்லோரையும் ஓரங்கட்டினார்.

தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா தற்போது 8 இன்னிங்ஸ்களில் 380 ரன்களுடன் புள்ளிப்பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தை பிடித்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 212.29 ஆக உள்ளது. நடப்பு தொடரில் அவர் இதுவரை 36 பவுண்டரிகள் மற்றும் 28 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, அபிஷேக் சர்மா 380 ரன்களுடன் முதலிடத்திலும், வைபவ் சூர்யவன்ஷி 357 ரன்களுடன் 2வது இடத்திலும், கேஎல் ராகுல் 357 ரன்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர். வைபவ்வின் ஸ்ட்ரைக் ரேட் 234.86 ஆக இருப்பது அனைவரையும் மிரள வைத்துள்ளது. இவர்களுக்கு அடுத்தபடியாக ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் கிளாசென் 349 ரன்களுடன் 4வது இடத்திலும், பெங்களூரு அணியின் விராட் கோலி 328 ரன்களுடன் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டும் உள்ளனர்.

இஷான் கிஷன் 312 ரன்களுடனும், சுப்மன் கில் 297 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அதிரடி பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ரன் மழை பொழிந்து வருவதால் ஆரஞ்சு தொப்பிக்கான இந்த 'மியூசிக்கல் சேர்' போட்டி இனி வரும் ஆட்டங்களில் மேலும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, April 26, 2026, 7:52 [IST]
Other articles published on Apr 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+