Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: 17 பந்தில் அரைசதம்.. ஒரே ஓவரில் 6 பவுண்டரி.. பிராப்சிம்ரன் அதிரடி.. பவர்பிளேவை கொளுத்திய பஞ்சாப்

டெல்லி: ஐபிஎல் 2026 போட்டியில் பஞ்சாப் அணி பவர்பிளேவில் டெல்லி பவுலிங்கை கொளுத்தி பதிலடி கொடுத்தது. டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் அக்ஸர் படேல் டாஸ் வென்று பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். கே.எல். ராகுல் ஐ.பி.எல் வரலாற்றில் 150 ரன்களுக்கு மேல் அடித்த முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையைப் படைத்தார்.

அவரது 152* ரன்களும் (16 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள்) நிதிஷ் ரானாவின் 91 ரன்களும் (44 பந்துகளில்) டெல்லி அணியை 264/2 என்ற போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரை எட்டச் செய்தன. இது ராகுலின் ஆறாவது ஐ.பி.எல் சதமாகும்.

பதிலுக்குக் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்கப் பேட்ஸ்மேன்களான பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் அதிரடி துவக்கத்தைக் கொடுத்தனர். பிரப்சிம்ரன் சிங் மிரட்டலாக ஆடி வெறும் 17 பந்துகளில் தனது அரை சதத்தைப் பதிவு செய்தார்.

பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் பிரப்சிம்ரன் ஆறு பவுண்டரிகளை குவித்து ஆச்சரியப்படுத்தினார். இதன் விளைவாக, பஞ்சாப் கிங்ஸ் பவர்ப்ளேயின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 116 ரன்கள் குவித்து, அணி 50 மற்றும் 100 ரன்களை இந்த காலகட்டத்திலேயே கடந்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் எடுக்கப்பட்ட 2வது அதிகபட்ச பவர்பிளே ஸ்கோர் இதுவாகும். முதலிடத்தில் சக்னரைசர்ஸ் அணி 125 ரன்களை குவித்து இருந்தது.

இந்த அதிவேக தொடக்கம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 200 ரன்களுக்கு மேல் உள்ள இலக்குகளைத் துரத்துவதில் பஞ்சாப் கிங்ஸ் அணி பெயர் பெற்றது.டெல்லி பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்தனர். ஆக்கிப் நபி (2 ஓவர்களில் 41 ரன்கள், ஒரு ஓவரில் 27 ரன்கள்) மற்றும் அக்ஸர் படேல் (முதல் ஓவரில் 20 ரன்கள்) அதிக ரன்களை வாரி வழங்கினர். ஆனால் தமிழக வீரர் நடராஜன் மட்டும் 1 ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

இனி ஸ்பின்னர்கள் பந்துவீச்சைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளனர்.இந்த ஆட்டத்தில் டெல்லி அணிக்கு மற்றொரு பெரிய கவலையாக லுங்கி நிகிடிக்கு ஏற்பட்ட கடுமையான காயம் அமைந்தது. பந்தை பிடிக்க முயன்றபோது அவர் தலையில் மோசமாக விழுந்தார். காயத்தின் தீவிரத்தால் களத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் ஸ்ட்ரெச்சர் வரவழைக்கப்பட்டு ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அவருக்குப் பதிலாக விப்ராஜ் நிகம், காயம் மாற்று வீரராக களமிறக்கப்பட்டார்.அதுமட்டுமல்லாமல், விக்கெட் கீப்பிங்கின் போது கே.எல். ராகுல் சற்று சிரமத்துடன் நகர்ந்தது கூடுதல் கவலையை அளித்தது. தேவைப்பட்டால், ஸ்டப்ஸை மாற்று விக்கெட் கீப்பராக களமிறக்க டெல்லி கேபிடல்ஸ் அணி பரிசீலிக்கும் நிலை உருவானது.

Story first published: Saturday, April 25, 2026, 18:49 [IST]
Other articles published on Apr 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+