Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: கில்லை தூக்கிய சாஹல்.. மிரட்டிய வைஷாக்.. குஜராத் அணியை சுருட்டிய பஞ்சாப் கிங்ஸ்

முல்லன்பூர்: 2026 ஐபிஎல் தொடரின் 4-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, பஞ்சாப் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.

குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர். சாய் சுதர்சன் 13 ரன்களில் மார்கோ ஜான்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த சுப்மன் கில் மற்றும் ஜோஸ் பட்லர் நிதானமாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். குறிப்பாக சுப்மன் கில் 27 பந்துகளில் 39 ரன்கள் எடுத்துச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

IPL 2026 PBKS vs GT Chahal and Vyshak Shine as Punjab Kings Restrict Gujarat Titans to 162 in IPL 2026

ஆட்டத்தின் போக்கை மாற்றியவர் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். அதிரடியாக விளையாடிய சுப்மன் கில்லை ஆட்டத்தின் 10-வது ஓவரில் சாஹல் வெளியேற்றினார். அதன்பிறகு நிலைத்து நின்று விளையாடிய ஜோஸ் பட்லரையும் (38 ரன்கள்) சாஹல் தனது சுழலில் வீழ்த்தினார். குஜராத் அணியின் இரண்டு முக்கியத் தூண்களையும் சாஹல் அடுத்தடுத்துச் சரித்தது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. 4 ஓவர்கள் வீசிய சாஹல் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இறுதி ஓவர்களில் குஜராத் அணி ரன்களைக் குவிக்கப் போராடியது. அப்போது பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் விஜய்குமார் வைஷாக் தனது துல்லியமான பந்துவீச்சால் குஜராத் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். கிளென் பிலிப்ஸ் (25), வாஷிங்டன் சுந்தர் (18) மற்றும் ஷாருக் கான் (4) ஆகிய 3 விக்கெட்டுகளை வைஷாக் வீழ்த்தி அசத்தினார். 4 ஓவர்கள் வீசிய அவர் 34 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ராகுல் திவேதியா 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் தரப்பில் மார்கோ ஜான்சன் 4 ஓவர்களில் வெறும் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தி கச்சிதமாகப் பந்துவீசினார். அர்ஷ்தீப் சிங் விக்கெட் ஏதும் எடுக்காமல் 42 ரன்களை வாரி வழங்கினார். 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்கியது.

Story first published: Tuesday, March 31, 2026, 21:37 [IST]
Other articles published on Mar 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+