Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ஒரு ஆண்டுக்கு பிறகு கடைசி இடத்திலிருந்து தப்பித்த சிஎஸ்கே.. பர்பிள் தொப்பி பந்தயத்தில் அன்சூல்

சென்னை: ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக பதிவு செய்தது. சிஎஸ்கே பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ், நான்கு போட்டிகளில் 8 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரவி பிஷ்னோய்க்கு அடுத்த இரண்டாம் இடத்தில் உள்ளார்.

சென்னையில் நடைபெற்ற இப்போட்டியில், சஞ்சு சாம்சன் 56 பந்துகளில் 115 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் வெற்றியைப் பெற்றுத்தர உதவினார். சாம்சனின் அபார பேட்டிங்கால், சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.

213 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ், 20 ஓவர்களில் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் பதும் நிஸ்ஸங்கா 24 பந்துகளில் 41 ரன்களும், 6வது வீரராகக் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 பந்துகளில் 60 ரன்களும் குவித்து போராடினர். இருப்பினும், வெற்றி இலக்கை எட்ட முடியாமல் போனது.

இந்த வெற்றியின் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தாண்டி, ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் 2 புள்ளிகளுடன் சிஎஸ்கே தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. மறுபுறம், டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திலேயே நீடிக்கிறது. அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணி, நான்கு போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

ஆரஞ்சு கேப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி நான்கு போட்டிகளில் 200 ரன்களுடன் முதலிடம் வகிக்கிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் கிளாசன் 184 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (183 ரன்கள்), துருவ் ஜூரெல் (176 ரன்கள்) அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சமீர் ரிஸ்வி 160 ரன்களுடன் 5வது இடத்தைப் பிடித்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்ததன் மூலம் 137 ரன்களுடன் 8வது இடத்திற்கு வந்துள்ளார். அதேபோல், டெல்லிக்கு எதிராக 115 ரன்கள் குவித்து, சிஎஸ்கே விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 137 ரன்களுடன் 9வது இடத்தையும், அயுஷ் மாத்ரே 133 ரன்களுடன் 10வது இடத்தையும் பிடித்தனர். மாத்ரே சென்னையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 59 ரன்கள் எடுத்திருந்தார்.

பர்பிள் கேப் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். அன்ஷுல் கம்போஜ் (சிஎஸ்கே) டெல்லிக்கு எதிராக 3 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம் மொத்தம் 8 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடி, சிஎஸ்கேவுக்கு எதிராக விக்கெட்டுகள் எடுக்கத் தவறியதால், தற்போது 5வது இடத்திற்குச் சரிந்துள்ளார். சிஎஸ்கேவின் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன், டெல்லிக்கு எதிராக 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, மொத்தம் 5 விக்கெட்டுகளுடன் பர்பிள் கேப் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை அன்று, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை மாலை 03:30 மணிக்கு எதிர்கொள்கிறது. அதே நாளில் இரவு 07:30 மணிக்கு மும்பையின் வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோத உள்ளது.

Story first published: Sunday, April 12, 2026, 0:44 [IST]
Other articles published on Apr 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+