Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: ஊதா தொப்பி பட்டியலில் நடராஜன் அதிரடி.. படுதோல்வி அடைந்த லக்னோ எந்த இடம்?

லக்னோ: ஐபிஎல் 2026 தொடரின் 5வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 18.4 ஓவர்களில் வெறும் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இதனையடுத்து 142 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணி 4.3 ஓவர்களில் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

இந்த நெருக்கடியான கட்டத்தில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய சமீர் ரிஸ்வி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உடன் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டது மட்டுமின்றி வெற்றியை நோக்கியும் அழைத்துச் சென்றார். அதிரடியாக விளையாடிய சமீர் ரிஸ்வி 47 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 32 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் மூலம் டெல்லி அணி 17.1 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

IPL 2026 Points Table Delhi Capitals in 3rd Spot Natarajan Purple cap Sameer Rizvi in Orange Cap Race

இந்த வெற்றியின் மூலம் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தலா 2 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் 4வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 5வது இடத்திலும் உள்ளன. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த லக்னோ அணி எட்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இப்போட்டியில் அபாரமாக விளையாடிய சமீர் ரிஸ்வி அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பி பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது மும்பை அணியின் ரையன் ரிக்கெல்டன் 81 ரன்களுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான டி நடராஜன் மற்றும் லுங்கி நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். 29 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய டி நடராஜன் ஊதா தொப்பி (Purple cap) பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நிகிடி 4வது இடத்தில் உள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது அடுத்த போட்டியில் ஏப்ரல் 4ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியையும், லக்னோ அணி ஏப்ரல் 5ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும் எதிர்கொள்ள உள்ளன.

Story first published: Thursday, April 2, 2026, 8:24 [IST]
Other articles published on Apr 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+