Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: பிளே ஆப் போக சிஎஸ்கே இன்னும் எத்தனை மேட்ச் ஜெயிக்கணும்? சிக்கலாக மாறிய கணக்கு

மும்பை: 2026 ஐபிஎல் டி20 தொடர் தற்போது அதன் உச்சகட்ட விறுவிறுப்பை எட்டியுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களை தலா 14 புள்ளிகளுடன் மூன்று அணிகள் ஆக்கிரமித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆப் வாய்ப்பு என்ன? தோனி இல்லாத சிஎஸ்கே அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற இன்னும் எத்தனை வெற்றிகள் தேவை? ரன் ரேட் கணக்குகள் சிஎஸ்கே அணியை கைவிடுமா அல்லது கைதூக்கி விடுமா? ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியலின் தற்போதைய நிலவரம் மற்றும் அணிகளின் வெற்றி வாய்ப்புகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 6 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று 5வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணிக்கு இன்னும் 3 லீக் போட்டிகள் மீதமுள்ளன. இதில் குறைந்தது 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே சிஎஸ்கே அணி 16 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியும். ஒருவேளை 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் எவ்வித சிக்கலும் இன்றி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

IPL 2026 Points Table How Many Points Does CSK Need for Playoffs Net Run Rate and Qualification Scenarios Analyzed

ஆனால், ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் மற்ற அணிகளின் தயவை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது பொதுவான கணக்கு தான். தற்போதைய சூழலில் சிஎஸ்கே அணி மூன்று போட்டிகளிலுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. அது ஏன் என்று பார்க்கலாம்.

தற்போதைய புள்ளிப்பட்டியலின்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய மூன்று அணிகளும் தலா 14 புள்ளிகளுடன் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இதில் பெங்களூரு அணி 1.103 என்ற சிறப்பான ரன் ரேட் வைத்துள்ளதால் முதலிடத்தில் உள்ளது. இந்த மூன்று அணிகளுக்கும் இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ளன. இவை தலா ஒரு போட்டியில் வென்றாலே 16 புள்ளிகளை எட்டிவிடும் என்பதால் சிஎஸ்கே அணியின் பாதை சற்று கடினமாகவே உள்ளது.

மற்றொரு பக்கம் பஞ்சாப் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் 13 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ளன. அதில் 2ல் வென்றாலே அவர்கள் 17 புள்ளிகளை எட்டி விடுவார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிஎஸ்கே அணியை போலவே 12 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இதனால் 4வது இடத்திற்கான போட்டியில் சென்னை, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே, சிஎஸ்கே அணி கடைசி மூன்று போட்டிகளிலும் வெல்வதே பிளே ஆப் செல்ல சிறந்த வழி.

ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகளுடன் கடைசி இரண்டு இடங்களைப் பிடித்து அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டன. டில்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இன்னும் நூலிழை வாய்ப்பு இருந்தாலும், அது மற்ற அணிகளின் தோல்வியைப் பொறுத்தே அமையும். சிஎஸ்கே அணி தனது அடுத்தடுத்த போட்டிகளில் லக்னோ, ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகளை எதிர்கொள்ள உள்ளது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே 'மஞ்சள் படை' ரசிகர்களின் பிளே ஆப் கனவு நனவாகும்.

ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல் (மே 10 முடிவில்)

  1. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 11 போட்டிகள் - 7 வெற்றிகள் - 14 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 1.103
  2. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 11 போட்டிகள் - 7 வெற்றிகள் - 14 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 0.737
  3. குஜராத் டைட்டன்ஸ் - 11 போட்டிகள் - 7 வெற்றிகள் - 14 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 0.228
  4. பஞ்சாப் கிங்ஸ் - 10 போட்டிகள் - 6 வெற்றிகள் - 13 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 0.571
  5. சென்னை சூப்பர் கிங்ஸ் - 11 போட்டிகள் - 6 வெற்றிகள் - 12 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 0.185
  6. ராஜஸ்தான் ராயல்ஸ் - 11 போட்டிகள் - 6 வெற்றிகள் - 12 புள்ளிகள் - நெட் ரன் ரேட் 0.082
  7. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 10 போட்டிகள் - 4 வெற்றிகள் - 9 புள்ளிகள் - நெட் ரன் ரேட் -0.169
  8. டெல்லி கேபிடல்ஸ் - 11 போட்டிகள் - 4 வெற்றிகள் - 8 புள்ளிகள் - நெட் ரன் ரேட் -1.154
  9. மும்பை இந்தியன்ஸ் - 11 போட்டிகள் - 3 வெற்றிகள் - 6 புள்ளிகள் - நெட் ரன் ரேட் -0.585
  10. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 11 போட்டிகள் - 3 வெற்றிகள் - 6 புள்ளிகள் - நெட் ரன் ரேட் -0.907
Story first published: Monday, May 11, 2026, 11:55 [IST]
Other articles published on May 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+