IPL 2026 புள்ளி பட்டியல்: ஆர்சிபியை கீழே இறக்கிய மழை.. PBKS முதலிடம்..ஆரஞ்ச்,பர்பிள் தொப்பி யாருக்கு
மும்பை: ஐபிஎல் 2026 சீசனின் புள்ளிப் பட்டியலில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியதால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. திங்கட்கிழமை இரவு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கேகேஆர் வெற்றி பெற்றிருந்தால் ஆர்சிபி முதலிடத்தைத் தக்கவைத்திருக்கும். ஆனால், எதிர்பாராதவிதமாக போட்டி மழையால் தடைபட்டதால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் விளைவாக, பஞ்சாப் கிங்ஸ் ஐந்து புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆர்சிபி அணி நான்கு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, 2.23 என்ற சிறந்த ரன் ரேட்டுடன் நான்கு புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இரண்டு போட்டிகளில் வென்று அதே நான்கு புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி பெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றியுடன் இரண்டு புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இரண்டு போட்டிகளுக்கு ஒரு வெற்றியுடன் இரண்டு புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் உள்ளன. மழை காரணமாக ஒரு புள்ளி பெற்ற கொல்கத்தா எட்டாவது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் ஒன்பதாவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் பத்தாவது இடத்திலும் நீடிக்கின்றன.
ஆரஞ்சு தொப்பிக்கான பட்டியலில், டெல்லி அணியின் சமீர் ரிஷி 160 ரன்களுடன் முதலிடம் வகிக்கிறார். சன்ரைசர்ஸ் அணியின் தென்னாப்பிரிக்க வீரர் 145 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 113 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
பர்பிள் தொப்பிக்கான பட்டியலில் ரவி பிஸ்னோய் ஆறு விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். விஜயகுமார் மிஸ்யாக் மற்றும் ஜேக்கப் டஃபி ஆகியோர் தலா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், பந்துவீச்சு சராசரியின் அடிப்படையில் பின்தங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications